- நமக்காகப் பொய் சொல்லுபவன் நமக்கு எதிராகவும் பொய் சொல்லுவான்.
- சாந்தமாகச் செல்பவன் பாதுகாப்பாகச் செல்கிறான்.
- மௌனம் சில சமயங்களில் உரத்த குரலைக் கொண்டுள்ளது.
- முட்டாளும் அவன் பணமும் சீக்கிரமாகவே பிரிகின்றன.
- துன்பம் உன்னைத் துன்புறுத்தாதவரை, துன்பத்தை நீ துன்புறுத்தாதே.
- வாழ்க்கை என்ன என்று தெரிந்து கொள்வதற்குள் அதன் அரைப் பகுதி கடந்துவிடுகிறது.
- எப்படி உடற்பயிற்சி உடம்புக்குத் தேவையோ அப்படியே படிப்பும் மனத்திற்குத் தேவை.
- இறைவனுக்கு அஞ்சுங்கள் அடுத்தபடியாக இறைவனுக்கு அஞ்சாதவனைக் கண்டு அஞ்சுங்கள்.
- படிக்க நேரம் ஒதுக்குங்கள். அது அறிவின் ஊற்று!
- பசி சுவை அறியாது. தூக்கம் சுகமறியாது. காமம் வெட்கமறியாது.
- வாழ்க்கையின் எதிர்ப்புத் தன்மையை நீக்குவது சகிப்புத் தன்மை என்ற எண்ணெய்.
- பணம் சேமிப்பது ஊசியால் குழி தோண்டுவது மாதிரி.
- அதிர்ஷ்டத்தை வார்க்கும் அச்சு அவனவன் கையில் தான் இருக்கிறது.
- ஒரு நகரத்தின் சிறந்த பாதுகாப்புச் சுவர் என்பது சமாதானமே.
- கடந்து போன நேரம் ஒருபோதும் திரும்பி வருவதில்லை.
- தெளிவான குறிக்கோளை நோக்கி முயற்சி செய்.
- இரக்கமில்லாதவன் நெஞ்சம் இரும்பினும் கொடிது.
- சரியாக புரிந்துகொள்வதற்கு இருக்கும் இரண்டு எதிரிகள் சினமும், சகிப்புத்தன்மையின்மையும்.
- ஒரு பாவம் நூறு பாவங்களை அதன் பின்னே இழுத்துச் செல்லும்.
- அறிவு நம்மை கைவிடும் போது நம்பிக்கையே உதவுகிறது.
- பெண்ணுக்கு மௌனத்தை விட சிறந்த அணிகலன் வேறில்லை.
- உன் அயலானை நேசி - ஆனால் வேலியை எடுத்து விடாதே.
- அறிவு நம்மை கைவிடும் போது நம்பிக்கையே உதவுகிறது.
- அச்சமும், வெறுப்பும் இல்லாமல் இருப்பவனே அறிஞன் எனக் கருதப்படுகிறான்.
- உழைக்கும் மனிதனே உயிர் வாழும் உரிமை உடையவன்.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- மற்றவர்களை அறிந்தவன் படித்தவன். அவனைப் பற்றியே அறிந்தவன் அறிவாளி.
- தந்தையின் அன்பு சுடுகாடு வரை மட்டும்தான். ஆனால், தாயன்பு என்றென்றும் உள்ளது.
- மனிதர்கள் அவர்களின் தாயார்களால் உண்டாக்கப்பட்டவர்கள் தான்.
- செயலற்ற தன்மை உன்னை மாற்றாது. செயல்படும் வேகமே மாற்றும்.
- திருமணத்திற்கு அழைப்பின் பேரில் செல். சாவுக்கு அழையாவிட்டாலும் செல்.
- ஒரு துளி மையிலிருந்து பிறக்கும் கருத்துக்கள் பல்லாயிரம் பேரைச் சிந்திக்க வைக்கும்.
- பெண்களின் உரிமைகளிலெல்லாம் பெரிய உரிமை ஒரு தாயாக இருப்பதுதான்.
- அழகிய மலர்கள் வயலோரத்தில் நீண்டகாலம் நிலைத்திருக்காது.
- எவன் ஒருவன் தனித்து அதிகம் நிற்கிறானோ, அவன் தான் மிகப் பலமானமனிதன்.
- கால்களில் நிற்கும் உழவன் முழங்காலில் மண்டியிட்டு இருக்கும் சான்றோனை விட மேலானவன்.
- ஒருவர் தானே ஏமாறுவது மாதிரி, மற்றவரால் மிக அதிகமாக ஏமாற்றப்படவில்லை.
- அடக்கம் ஒரு ஆபரணம் மாத்திரமல்லாமல், நற்குணத்திற்கு ஒரு காவலன்.
- ஒருவன் தன் சொந்தத் தனித் தன்மையை விடுத்து, வேறொரு மனிதன் ஆகக் கூடாது.
- மூட நம்பிக்கை மனவலிமை இல்லாதவர்களின் மதம்.
- ஒரு வசீகரமான கடுஞ்சொல் ஆயிரம் கேவலங்களுக்குச் சமம்.
- அவசரத்தில் திருமணம் செய்யின், ஓய்வு நேரத்தில் வருந்த வேண்டும்.
- தேளுக்கு அதிகாரம் கொடுத்தால், அது நொடிக்கு நொடி கொட்டும்.
- வாதத்திற்கு மருந்து உண்டு. பிடிவாதத்திற்கு மருந்தில்லை.
- சிறு சிறு வெட்டுக்கள் தான் பெரிய மரங்களை வீழ்த்துகின்றன.
- ஒரு நல்லது செய்ய கெட்ட நேரம் என்று ஒன்று எப்போதுமில்லை.
- அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொள்ள, எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
- அதிகம் வைத்திருப்பவன் பணக்காரன் அல்ல. அதிகம் கொடுப்பவனே பணக்காரன்.
- ஒரு பொய், ஈட்டியை விட ஆழமான காயத்தை உண்டாக்கும்.
- பிறகு என்பதும், பேசாமலிருப்பதும் இல்லையென்பதற்குச் சமம்.
- உன்னுடைய தவறுகளை மற்றவர்கள் மிகைப்படுத்துவதற்கு முன்னால் ஒப்புக்கொள்.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- நேரத்தை தள்ளிப்போடாதே, தாமதங்கள் அபாயமான முடிவைக் கொண்டுள்ளன,
- நாளைக்கு கொடுக்கக்கூடியதாக இருந்தால் இன்றே கொடுத்துவிடு.
- விளம்பரத்திற்காக செய்யப்படும் எந்தத் தானமும் தானமல்ல.
- உன்னில் குற்றங்கள் இருந்தால், அவைகளைக் களையப் பயப்படாதே.
- ஒரு குழந்தை அதன் தூக்கத்தில் சிரித்தால் தேவதையோடு சிரிக்கிறது.
- பயத்தினால் பயன் உள்ளது. ஆனால், கோழைத்தனத்துக்கு ஒன்றுமில்லை.
- குருடன் முடவனைத் தூக்கிக் கொண்டால் இருவரும் முன்னே போகிறார்கள்.
- காலத்தின் கர்ப்பப் பையில் எதிர்காலம் படுத்துக்கிடக்கிறது.
- எந்த வீட்டில் குழந்தைகள் இல்லையோ, அந்த வீட்டில் ஒளியில்லை.
- இன்று செய்ய முடிந்ததை நாளைவரை ஒருபோதும் தள்ளிப்போடாதே.
- காலத்தை வீணாக்குவது தனைத்தானே கொள்ளையடிப்பதற்கு சமம்.
- நீதிபதியை விட காலம்தான் உண்மையை வெளிக்கொண்டு வருகிறது.
- பழமொழி தெரிந்த அறிவாளி, துன்பங்களைச் சமாதானப் படுத்திக் கொள்கிறான்.
- காலத்தை விட பழிவாங்கக் கூடியது வேறு ஒன்றும் இல்லை.
- நீ யாரை வேண்டுமானாலும் சந்தேகி. ஆனால் உன்னையேயல்ல.
- உழைக்க நேரம் ஒதுக்குங்கள், அது வெற்றியின் விலை.
- மற்றவர்களுடைய வாழ்க்கையோடு ஒப்பிடாமல் உன் சொந்த வாழ்க்கையை அனுபவி.
- பொறுமையாக இருக்க முடியுமானால் உலகில் உள்ள அனைத்தையும் பெற முடியும்.
- பயத்தை உன்னிடமே வைத்துக்கொள், உன் துணியைப் பகிர்ந்து கொள்.
- சிந்தனை செய்யாமல் படிப்பது ஜீரணம் செய்யாமல் உண்ணுவதற்குச் சமம்.
- செல்வன் சொல்லுக்கு அஞ்சான்; வீரன் போருக்கு அஞ்சான்.
- பணம் பேசத் தொடங்கினால் உலகம் வாயை மூடிக் கொள்ளும்.
- தன்னம்பிக்கை பெரியப் பிரயத்தனங்களுக்கு முதல் தேவை.
- சிறு குடும்பமானால், வேண்டியவை விரைவில் கிடைக்கும்.
- தியாக வாழ்க்கை கலையின் சிகரம். அது தான் முற்றிலும் உண்மையான மகிழ்ச்சி.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- அதிகம் பேசுபவர்கள் நல்ல செயல் ஆற்றுபவர்கள் அல்ல.
- திரும்பத் திரும்பச் சொல்லும் பேச்சு சுவையின்மையும், சலிப்பையும் ஏற்படுத்தும்.
- மனிதர்களுடைய மனத்தை வசப்படுத்தும் கலைதான் வாக்கு வன்மை.
- ஏராளமான வாய்ப்புகள் வரும்போது எச்சரிக்கையாக இரு.
- பூக்கள் என்ற சொற்களை, ஒரு குழந்தையாலும் புரிந்து கொள்ள முடியும்.
- நூல்களும் நண்பர்களும் குறைவாகவும் தரமாகவும் இருக்க வேண்டும்.
- உன்னுடைய பழக்கங்களைக் கவனி, அவைகள் உன்னுடைய குணங்கள் ஆகும்.
- அறிவுள்ள மனிதனுடன் நடப்பவன், அறிவுள்ளவனாக இருப்பான்.
- ஏகாந்தம் தரிசனம் செய்ய நல்ல இடம். ஆனால், அங்கேயே வசிக்க மோசமான இடம்.
- நிதானமும், சீரான போக்கும் போட்டியை வெல்லும்.
- பாதிப் பணக்காரனாகி விட்டால் முழுப் பணக்காரன் ஆவது எளிது.
- ஒன்றுக்குமே கடன்பட்டிருக்காதவன் எவனோ அவனே செல்வந்தன்.
- பணமில்லாத ஒரு மனிதன் பாய்மரம் இல்லாத ஒரு கப்பலைப் போல.
- பணம் சம்பாதிப்பவர் ஒருபோதும் களைப்படையமாட்டார்.
- பணம் பார்த்து பண்டம் கொள். குணம் பார்த்து பெண்ணைக் கொள்.
- தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்கு.
- குழந்தை ஒரு தேவதை; கால்களே அதன் சிறகுகள்.
- சட்டத்தின் துணையை நாடுபவன் ஆட்டுக்காகப் பசுவை இழக்கிறான்.
- கேட்பதினால் ஞானம் வருகிறது. பேசுவதினால் வருத்தம் வருகிறது.
- குரு குற்றம் செய்கிறவன் அதைப் பற்றியே எல்லாரும் பேசுவதாக நினைக்கிறான்.
- கொடுத்தவன் ஒருபோதும் நினைவில் வைத்திருக்கக் கூடாது. பெற்றவன் ஒருபோதும் மறக்கக் கூடாது.
- வாய்ப்பு ஏற்படும் போது உடனடியாக நல்லது செய்து விடுங்கள்.
- குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் இருவரும் பள்ளத்தில் தான் வீழ்வார்கள்.
- காற்றுகளும் அலைகளும் எப்போதும் திறமையான மாலுமிகள் பக்கமே இருக்கின்றன.
- விளையாட நேரம் ஒதுக்குங்கள். அது இளமையின் இரகசியம்.
- உண்மையைத் தவிர வேறு எதுவுமே அழகில்லை.
- நலமான உடல் ஆன்மாவின் கோயில், நலிவான உடல் ஆத்மாவின் சிறைச்சாலை.
- எல்லா உண்மைகளும் சொல்வதற்காக இல்லை.
- உண்மை சொல்லிக் கெட்டாரும் இல்லை. பொய் சொல்லி வாழ்ந்தாரும் இல்லை.
- உண்மை பலம் வாய்ந்ததாக இருப்பதால் அது ஜெயிக்கும்.
- வயிற்றை எளிதில் நிரப்பிவிடலாம். கண்ணையும் மனதையும் திருப்தி செய்வது மிகவும் கடினம்.
- நீ நிமிடங்களைக் கவனித்துக் கொண்டால், மணி நேரங்கள் அவைகளாகவே கவனித்துக் கொள்ளும்.
- நம் வாழ்க்கையில் முன்னேறும்பொழுது தான் நம் திறமைகளின் எல்லைகளைக் கற்றுக் கொள்கிறோம்.
- உயர்வும் நல்லவைகளும் கருவிச் சாதனங்கள் அல்ல. அவைகள் முடிவுகள்.
- பொறுமை கசக்கும். ஆனால், அதன் பழம் இனிமையானது.
- பணம் அறிவாளிக்கு தொண்டு புரிகிறது. முட்டாளை ஆட்சி செய்கிறது.
- பொறுமையும், காலமும், பலத்தையும் உணர்ச்சியையும் விட சிறந்தது.
- அறியாமையின் குழந்தைதான் தப்பான அபிப்பிராயம்.
- குறைந்த வார்த்தை மேலான பிரார்த்தனையாகும்.
- கெட்ட பழக்கங்கள் வருவது எளிது. வந்தபின் கை விடுவது கடினம்.
- எல்லா பெரிய மனிதர்களும் நடுத்தரக் குடும்பத்திலிருந்து தான் வருகிறார்கள்.
- கவரச்சிகள் பார்வையை ஈர்க்கின்றன. ஆனால் திறமை ஆத்மாவை வெல்லுகிறது.
- புத்திசாலித்தனம் குறைந்திருப்பதைவிட பைசா குறைந்து இருப்பது நல்லது.
- குழைந்தைகாகப் பெற்றோர் வைத்திருக்கும் சிநேகம், அன்பு மாதிரி வேறெதுவுமில்லை.
- எதிரிக்குப் பதில் அளிக்குமுன் அவனைப் புரிந்து கொள்.
- நல்ல பழக்கங்கள் வருவது கடினம். வந்தபின் கடைப்பிடிப்பது எளிது.
- வீம்பு பேசுகிறவன் அழிவான்; வீரியம் பேசுகிறவன் விழுவான்.
- உன்னுடைய செய்கைகளைக் கவனி, அவைகள் உன்னுடைய பழக்கங்கள் ஆகும்.
- பொது அறிவு ஒரு உள்ளுணர்வு. அதன் அதிகம் தான் மேதாவித்தனம்.
- அறிவாளியின் ஒரு நாளைய வாழ்வு, முட்டாளின் ஆயுட்கால வாழ்வுக்குச் சமம்.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- இயற்கையின் நடையைப் பின்பற்று. அதன் ரகசியம் பொறுமை.
- உண்மையைத் தரையில் போட்டு அழுத்தினாலும், அது மறுபடியும் எழுந்துவிடும்.
- ஏழாண்டுகள் ஒரு பொருளை வைத்திரு. அதன் உபயோகத்தை ஒரு நாள் அறிவாய்.
- தங்கும் கட்டிடம் செங்கற்களால் ஆனது. வீடு இதயங்களால் ஆனது.
- இன்பத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அது இருமடங்காய்ப் பெருகும்.
- அறிவுள்ள விமர்சகரைவிட பொது ஜனங்கள் அறிவு உள்ளவர்கள்.
- மகிழ்ச்சியும் துயரமும் அதிக இடைவெளியில் எப்போதுமில்லை.
- நாற்பது என்பது இளமையின் முதுமை. ஐம்பது என்பது முதுமையின் இளமை.
- சொர்கமும் நரகமும் உன்னுடைய இதயத்தில் இருக்கிறது.
- காலம் தவறிய உண்மை பொய்யைப் போலத் தீயது.
- பார்க்காமல் எதையும் பருகாதே. படிக்காமல் எதிலும் கையெழுத்துப் போடாதே.
- மூவர் உண்மையைப் பேசுகிறார்கள் - முட்டாள்கள், குழந்தைகள், குடிகாரர்கள்.
- இதயம் பேச விரும்பாவிட்டால் கண்கள் பேசும்.
- சிலர் பாவச் செயல்களினால் உயர்கின்றனர். சிலர் நற்பண்புகளால் வீழ்கின்றனர்.
- உன்னுடைய மனப்பாங்குதான் உன் உயர்வைத் தீர்மானிக்கும்.
- தன்னைச் சிதைக்கும் கோடாரிக்கும் வாசனை கொடுக்கும் சந்தனம்.
- கடவுள், பெற்றோர்கள், ஆசான் இவர்களுக்கு ஒருபோதும் கைமாறு செய்ய முடியாது.
- சொற்கள் தேனீக்களைப் போல அவைகளில் தேனும் உண்டு. கொடுக்கும் உண்டு.
- இளமையாயிருக்கும் சமயத்திலேயே சேமிப்பு செய். முதுமையாயிருக்கும் பொது செலவு செய்.
- அன்பு என்ற பாணியை ஊமைகள் பேசமுடியும். செவிடர்கள் கேட்கவும் புரியவும் செய்ய முடியும்.
- நேரம் விலை உயர்ந்தது. ஆனால், உண்மை நேரத்தைவிட அதிக விலை உயர்ந்தது.
- உணர்வதை நாம் செய்வோம். சொல்வதை உணர்வோம்.
- மெலிந்த சுதந்திரம் கொழுத்த அடிமைத் தனத்தைவிடச் சிறந்தது.
- சேற்றில் விழுவது ஒன்றும் இழிவு இல்லை. அங்கேயே கிடப்பது தான் இழிவு.
- கல்வி, அனுபவம், ஞாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பறிக்க முடியாது.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- குற்றங்களிலெல்லாம் பெரிய குற்றம் அவைகளை உணராமலிருப்பதுதான்.
- காக்கையைப் போல் பகிர்ந்துண்ண, மனிதன் பழக்கப் படுத்திக்கொள்ள வேண்டும்.
- எந்த ஒரு பெரிய காரியமும் ஆர்வமில்லாமல் ஒருபோதும் சாதிக்க முடியாது.
- விழித்துக்கொண்டிருக்கும் துன்பங்களுக்கு தூக்கம் தான் நல்ல சிகிச்சை.
- வாழ்க்கை என்ன என்று தெரிந்து கொள்வதற்குள் அதன் அரைப் பகுதி கடந்துவிடுகிறது.
- மென்மையான சொல் இரும்பு வாசலைத் திறக்கிறது.
- அன்பு கொடுப்பவரையும், பெறுகிறவரையும் குணமடையச் செய்கிறது.
- உயர்வும் நல்லவைகளும் கருவிச் சாதனங்கள் அல்ல. அவைகள் முடிவுகள்.
- மௌனம் சில சமயங்களில் உரத்த குரலைக் கொண்டுள்ளது.
- ஒவ்வொரு காரியத்திலும் நாம் முடிவைக் கவனிக்க வேண்டும்.
- ஒரு மனிதன், பார்வையிலிருந்து விலகியிருந்தால் அவனை மறப்பதற்கு அதிக நாள் ஆகாது.
- அன்பு என்பது முற்றிலும் செலவுகளால் சூழப்பட்ட உணர்ச்சிக் கடல்.
- மௌனம் விவாதங்களை ஆட்சேபிக்கும் பலம் கொண்டது.
- உன்னால் முடிந்ததையெல்லாம் செய்துவிட்டு இறைவனிடம் உதவிகேள்.
- நட்பு மகிழ்ச்சியைப் பெருக்கும். துயரத்தைப் பங்கிட்டுக்கொள்ளும்.
- நிம்மதியற்ற மனது, அடுத்தடுத்த தவறுகளுக்கு காரணமாகிவிடும்.
- வலியும், மகிழ்ச்சியும், வெளிச்சமும், இரவும்போல ஒன்றையொன்று அடுத்தடுத்து வரும்.
- குட்டக் குட்ட குனிபவனும் முட்டாள், குனியக் குனியக் குட்டுபவனும் முட்டாள்.
- துரதிர்ஷ்டங்கள் எப்பொழுதும் தனிமையில் வருவதில்லை.
- செவிடனாகப் பாசாங்கு செய். ஆனால், எல்லா மூலைகளிலிருந்தும் கேள்.
- தொடக்கத்தை விட முடிவைப்பற்றி அதிகமாகச் சிந்தனை செய்யவேண்டும்.
- துன்பம் உன்னைத் துன்புறுத்தாதவரை, துன்பத்தை நீ துன்புறுத்தாதே.
- இந்த பூமியில் எஜமானர்களுக்குச் சேவை செய்ய முடியாது.
- மனிதன் முடிந்ததைச் செய்கிறான், கடவுள் விரும்பியதைச் செய்கிறார்.
- வாழ்வில் நிறையப் பெற வேண்டுமென்றால், நீ அதிகமாக உழைக்க வேண்டும்.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- இதயத்தில் இடம் இருக்கிறபோது வீட்டிலும் இடம் இருக்கிறது.
- இளமை புண்ணியமுமல்ல; முதுமை பாவமுமல்ல.
- ரகசியம் என்ன ஊட்டுகிறோமோ அதைப் பொறுத்தே மனம் வளர்கிறது.
- ஒவ்வொரு மனிதனும் அவனுடைய சிலுவையை சுமக்க வேண்டும்.
- இன்றைய ஒரு மணி நேரம் நாளைய இரண்டு மணி நேரத்துக்குச் சமம்.
- காயப்படுத்தும் உண்மையைவிட குணப்படுத்தும் பொய்யே மேல்.
- அடுத்தவர்களின் முட்டாள் தனத்திலிருந்து புத்தி கற்றுக் கொள்.
- அதிக தூரம் பிரயாணம் செய்பவன் அதிகம் அறிந்து வைத்துள்ளான்.
- பைசாவைக் கவனித்துக் கொள். ரூபாய்கள் தானாகக் கவனித்துக் கொள்ளும்.
- பின்னோக்கி வெகுதூரம் பார்ப்பவனே, முன்னோக்கி வெகுதூரம் பார்க்க முடியும்.
- வாழ்க்கை அனுபவம் இல்லாத எவரும் கல்வி கற்றவராக முடியாது.
- அரை குறை அறிவு, அரைக்கிணறு தாண்டுவது போன்ற ஆபத்து.
- அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
- ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கும் அதிர்ஷ்டத்திற்கு அவன்தான் சிற்பி.
- வாக்குறுதிகளைப் பொறுத்தமட்டிலும் ஒவ்வொருவரும் கோடீஸ்வரன்.
- தாய்தான் கடவுள் என்று சிறு குழந்தைகளின் உதடுகளிலும் இதயங்களிலும் இருக்கின்றன.
- உன்னுடைய சொற்களைக் கவனி, அவைகள் உன்னுடைய செய்கைகள் ஆகும்.
- தன் உள்ளத்தோடு செய்யும் போராட்டமே உயர்ந்த போராட்டம்.
- அரை மூடர்களிடமும் அரை ஞானிகளிடமும் தான் பெரிய அபாயம் உள்ளது.
- மூட நம்பிக்கை பலவீனமான மனங்களின் மதம்.
- அலட்சியம் என்ற உறைக்குள்தான் தீமை தன் கையைச் சொருகிக் கொண்டிருக்கிறது.
- தனக்கு அறிவின்மை இருப்பதை உணர்வதே அறிவு தேடுவதற்கு வழி.
- ஆகாயத்தின் ரத்தினம் சூரியன்; வீட்டின் அலங்காரம் குழந்தை.
- நாவை அடக்கப் பழகிய குழந்தை விரைவிலேயே பேசக் கற்றுக்கொள்ளும்.
- தனிமைக்கு ஈடான தோழனை நான் இதுவரை கண்டதில்லை.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- பெண் குழந்தை இல்லாதவனுக்கு அன்பைப் பற்றி அறிய முடியாது.
- ஒரு திருமணத்தை வெற்றியடையச் செய்யவேண்டுமென்றால் இருவர் தேவை.
- கடமைதான் நம்முடைய தலைவிதியை நிர்ணயிக்கின்றது.
- மானிடர்களை முழுமையாகத் திருத்த முடியாது. ஆனால் முன்னேறச் செய்யலாம்.
- மனசாட்சி ஆயிரம் சாட்சிகளுக்கு சமமானது.
- வெள்ளம் உயர்ந்தால் மலர் உயரும். உள்ளம் உயர்ந்தால் நீ உயர்வாய்.
- வாழ்நாள் முழுவதும் இன்பமாயிருக்க நாணயமாய் நடந்து கொள்.
- முறையற்ற வாடகைக்காரனை விட, காலி வீடே மேலானது.
- இரு மொழிகள் அறிந்தவர் இருவருக்குச் சமமானவர்.
- நல்ல மனைவியும், தேக ஆரோக்கியமும் மனிதனின் சிறந்த செல்வம்.
- அநேக உண்மைகள் வேடிக்கைப் பேச்சிலே வெளியாகி விடுகின்றன.
- நேர்மையுள்ளவர்களிடம் தான் பணிவுமிருக்கும்.
- கீழ்படிய முடியாதவனுக்கு தலைமை தாங்கவும் முடியாது.
- நண்பர்களை பற்றி நல்லதே பேசு, விரோதியைப் பற்றி எதையும் பேசாதே.
- ஒரு நல்ல புத்தகம் தலைசிறந்த ஆன்மாவின் விலைமதிப்பற்ற உயிர் துடிப்பு.
- அணையை உடைத்துப்போன வெள்ளம், அழுதால் திரும்பி வருமா?
- ஒரு முறை சேமித்த தொகை, இருமுறை சம்பாதித்த தொகைக்குச் சமமாகும்.
- அரியும் சிவனும் ஒண்ணு; இதை அறியாதவன் வாயிலே மண்ணு.
- உணவை அதிகரித்துக் கொண்டால் ஆயுளைக் குறைத்துக் கொள்ள நேரும்.
- அரைப் பணத்துக்குப் போன கற்பு, ஆயிரம் கொடுத்தாலும் திரும்பாது.
- எந்த நிறத்தைச் சேர்த்தாலும் கறுப்பின் சொந்தநிறத்தை மாற்ற முடியாது.
- ஒருவர் அறிவுள்ளவராக இருந்தால் இருவர் வாழலாம்.
- மூட நம்பிக்கை கடவுளின் மேலுள்ள அர்த்தமற்ற பயம்.
- போதுமென்று நீ இருந்தால், சுகமாக வாழ போதுமானது உன்னிடம் உள்ளது.
- சிறிய துன்பங்கள் பேசுகின்றன. பெரிய துன்பங்கள் மௌனமாக இருக்கின்றன.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
- குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
- குப்பை உயரும்; கோபுரம் தாழும்.
- குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
- குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல்.
- குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
- குரு இல்லார்க்கு வித்தையுமில்லை; முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
- குரு மொழி கேளாதவனும் தாய் சொல்லுக்கு அடங்காதவனும் சண்டி.
- குரு மொழி மறந்தோன் திரு அழிந்து அழிவான்.
- குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
- குரைக்கிற நாய் கடிக்காது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
- குறும்பியுள்ள காதும் குற்றமுள்ள நெஞ்சும் குறுகுறு என்குமாம்.
- பழக்கங்கள் முதலில் ஒட்டடைகள், பின்னர் இரும்பு கம்பிகள்.
- அறிவாளிகளின் எழுத்துக்கள் தான் நமது சந்ததிகள் திருட முடியாத சொத்து.
- இதயத்தில் ஒரு வலி இருப்பதைவிட எலும்பில் ஒரு வலி இருப்பது மேல்.
- ஒவ்வொரு மலையும் பள்ளத்தாக்கைக் கொண்டுள்ளது.
- உள்ளத்தை உடலுக்கு அடிமைப்படுத்துபவன் மிருகம்.
- உழைப்பும் நேர்மையும் வெற்றி பெறச் செய்யும் பேராயுதங்கள்.
- காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது.
- ஆண்டவனின் கோபத்தை எடை போடலாம், அருளை எடை போட முடியாது.
- அண்டத்தையே சுமக்கிறவனுக்குச் சுண்டைக்காய் என்ன பாரம்?
- கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியவில்லை. அதனால்தான் தாய்மார்களை உண்டாக்கினார்.
- வாழ்க்கை வாழ்வதில் இல்லை. நம் விருப்பத்தில் இருக்கிறது.
- ஒரு திருடனைப் பிடிக்க வேறு ஒரு திருடனை அமர்த்திக்கொள்.
- அருமை அறியாதவன் வீட்டுக்குப் போனால் பெருமை குறைந்து போகும்.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- காரியமாகும் வரையில் கழுதையானாலும் காலைப்பிடி.
- காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
- கார்த்திகைக்குப் பின் மழையும் இல்லை; கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை.
- காற்றில்லாமல் தூசி பறக்குமா?
- காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.
- காலம் அறிந்து பிழைக்காதவன் வால் அறுந்த குரங்கு ஆவான்.
- காலம் செய்வதை ஞாலம் செய்யாது.
- காலம் போகும் வார்த்தை நிற்கும்; கப்பல் போகும் துறை சேரும்.
- காலுக்குதக்க செருப்பும்; கூலிக்குத் தக்க உழைப்பும்.
- கால் வயிற்றுக் கஞ்சியானாலும் கடன் இல்லா கஞ்சி.
- காவடியின் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.
- காஞ்சவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல.
- கிட்டாதாயின் வெட்டென மற.
- கிணற்றுக்குத் தப்பி தீயிலே பாய்வோமா?
- கிணற்றுத் தவளைக்கு நாட்டு நடப்பு தெரியுமா?
- கீர்த்தியால் பசி தீருமா? கீறி ஆற்றினால் புண் ஆறும்.
- குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
- குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
- குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
- குணத்தை மாற்றக் குருவில்லை.
- குணம் இல்லா வித்தை எல்லாம் பாழ்.
- குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்.
- குலத்தைவிடக் குணமே பெரிது.
- குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது போல்.
- குதிரை ஏறாமல் கெட்டது; கடன் கேளாமல் கெட்டது.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்.
- கல்விக்கு இருவர்; களவுக் கொருவர்.
- கல்வியற்ற இரம்பையைவிட கல்வியறிவுள்ள சாதாரணப் பெண் மேல்.
- களை பிடுங்காப் பயிர் காற்பயிர். கள்ள மனம் துள்ளும்.
- கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
- கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
- கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
- கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்.
- கழுதை அறியுமா கற்பூர வாசனை?
- கவலை உடையோர்க்குத் கண்ணுறக்கம் வராது.
- காகம் திட்டி மாடு சாகாது.
- காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு.
- காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல்.
- காக்காயும், நாவிதனும் வாயை மூடமாட்டார்கள் .
- காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும்; காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
- காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
- காட்டுப் பூனைக்குச் சிவராத்திரி விரதமா?
- காண ஒரு தடவை; கும்பிட ஒரு தடவையா?
- காணாமல் கண்ட கம்பங்க்கூழை சிந்தாமல் குடி.
- காணி ஆசை கோடி கேடு.
- காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
- காயும் கனியும் உண்டானால் கார்த்திகையில் திருமணம்.
- காய் சுமையைக் கொடி தாங்காதா?
- காய்த்த மரம் தான் கல்லடி படும்.
- காய்ந்தும் கெடுத்தது; பெய்தும் கெடுத்தது.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- கண்ணாலே கண்டாலும் மண்ணாலே மறை.
- கண்ணிற் பட்டால் கரிக்குமா? புருவத்திற் பட்டால் கரிக்குமா?
- கண்ணிலே குத்தின விரலை வெட்டியா விடமுடியும்?
- கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
- கனிந்த பழம் தானே விழும்.
- கன்று கூடி களமடிக்க வைக்கோளுமாகாது; செத்தையும் ஆகாது.
- கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
- கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை விற்றா விடியும்.
- கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்.
- கரணம் தப்பினால் மரணம்.
- கரிவிற்ற பணம் கருப்பாய் இருக்குமா?
- கரும்பு கசிக்கிறது வாய்க் குற்றம்.
- கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
- கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாமா?
- கறையான் புற்று பாம்புக்கு வீடு.
- கற்கையில் கல்வி கசப்பு; கற்றபின் அதுவே இனிப்பு.
- கற்பில்லா அழகு; வாசமில்லாப் பூ.
- கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
- கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
- உலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
- கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
- கல்லடிச் சித்தன் போன வழி; காடுமேடெல்லாம் தவிடுபொடி.
- கல்லாடம் (நூல்) படித்தவனோடு மல் ஆடாதே.
- கல்லாதவரே கண்ணில்லாதவர்.
- கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- கடல் திடலாகும்; திடல் கடலாகும்.
- கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
- கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
- கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
- கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
- கடுகு களவும் களவு தான்; கற்பூரம் களவும் களவுதான்.
- கடுகு போனதைத் தேடுவார்; மலை போறது தெரியாது.
- கடுங்காற்று மழை கூட்டும்; கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
- கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
- கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
- கட்டிக்கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த பொய்யும் எத்தனை நாள் நிற்கும்.
- கட்டின சேலை பாம்பாய் கடித்ததாம்.
- கட்டின வீட்டுக்கு எட்டு வக்கணை.
- கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
- கட்டை உள்ளவரை கஷ்டமுண்டு.
- கணக்கன் கணக்கறிவான்; தன் கணக்கைத் தான் அறியான்.
- கணக்கன் கணக்கைத் தின்னாவிடில். கணக்கனை கணக்கு தின்று விடும்.
- கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குத் குறைவில்லை.
- கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
- கண் கண்டது கை செய்யும்.
- கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
- கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
- கண்டது சொல்ல வந்திடும் பகை.
- கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
- கண்டால் ஒரு பேச்சு; காணாவிட்டால் ஒரு பேச்சு.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- ஒரு காசு சேத்தா இரு காசு தேறும்.
- ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை.
- ஒரு கை முழம் போடுமா?
- ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
- ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை.
- ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
- ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
- ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உறியிலே சோறு.
- நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத் தெருவிலே ஓடு.
- ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
- ஒருவனாய் பிறந்தால் தனிமை; இருவராய்ப் பிறந்தால் பகைமை.
- ஒருவர் அறிந்தால் இரகசியம்; இருவர் அறிந்தால் அம்பலம்.
- ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு; அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
- ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
- ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
- ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்.
- ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
- ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
- ஔவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
- கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
- கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டவனும் கெட்டான்.
- கடன் வாங்கியும் பட்டினி; கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
- கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
- கடலைத் தாண்ட ஆசையுண்டு; கால்வாயைத் தாண்டக் கால் வல்லை.
- கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்.
- எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
- எல்லார் தலையிலும் எட்டு எழுது; பாவி என் தலையில பத்தெழுத்து.
- எல்லாத்துக்கும் ஒரு அழுகையாய் அழுதுவிடுங்கள்.
- எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது.
- எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் தூக்குவது யார்?
- எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்.
- எள் என்கிறதற்கு முன்னே வெண்ணெய் கொண்டு வருகிறான்.
- எள்ளுக்கு ஏழு உழவு; கொள்ளுக்கு ஓர் உழவு.
- எழுதா கடன் அழுதால் வருமா?
- எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
- எழுதியவன் ஏட்டை கெடுத்தான்; படித்தவன் பாட்டைக் கெடுத்தான்.
- எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
- ஏதென்று கேட்பாருமில்லை; எடுத்துப் பிடிப்பாருமில்லை.
- ஏன் என்பாரும் இல்லை; எடுத்துப் பார்ப்பாரும் இல்லை.
- ஏரி நிறைந்தால் கரை கசியும்.
- ஏர் உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
- ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம். இறங்கச் சொன்னால் மூடவனுக்குக் கோபம்.
- ஏழை என்றால் எவருக்கும் எளிது.
- ஏழை பேச்சு அம்பலம் ஏறாது.
- ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல்; செய்கிறவனுக்குத் தலைச்சுமை.
- ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
- ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது.
- ஐயர் வருகிறவரை அமாவாசை நிற்குமா?
- ஒத்துமையில்லாக் குடி ஒருமிக்கக் கெடும்.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- ஊனுக்கு முந்து; வேலைக்குப் பிந்து.
- ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.
- ஊரார் பண்டம் உமி போல்; தன் பண்டம் தங்கம் போல.
- ஊர் இருக்கு பிச்சை போட; ஓடு இருக்கு வாங்கிக்கொள்ள.
- ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
- ஊர் எல்லாம் சுற்றி; என் பேர் முக்தி.
- ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
- எங்கே வெலைஞ்சாலும் காஞ்சிரங்காய் தேங்காயாகுமா?
- எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
- எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
- எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
- எதார்த்தவாதி வெகுசன் விரோதி.
- எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
- எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்க வேண்டும்.
- எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
- எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
- எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்.
- எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
- எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
- எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
- எறும்பு ஊற கல்லும் தேயும்.
- எறும்புந் தன் கையால் எண் சாண்.
- எலி அழுதால் பூனை விடுமா?
- எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
- எலி வலை யானாலும் தனி வலை வேண்டும்.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
- உடல் ஒருவனுக்குப் பிறந்தது: நாக்கு பலருக்குப் பிறந்தது.
- உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
- உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
- உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
- உடுத்திக் கெட்டான் பார்ப்பான்; உண்டு கெட்டான் வெள்ளாளன்.
- உண்ட உடம்பிற்கு உறுதி; உழுத புலத்தில் நெல்லு.
- உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
- உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
- உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
- உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
- உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
- உரலில் தலையை விட்ட பிறகு உலக்கைக்கு அஞ்சலாமா?
- உரலுக்கு ஒரு பக்கம் இடி: மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி.
- உரல் போய் மத்தளத்திடம் முறையிட்டதாம்.
- உறவு போகாமல் கெட்டது; கடன் கேட்காமல் கெட்டது.
- உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.
- உலை வைத்த சந்திலே சாறு காய்ச்சுவது போல்.
- உலோபிக்கு இரட்டை செலவு.
- உலோபியிடம் யாசித்தல் கடலில் கேணி வெட்டுவது போல.
- உளவு இல்லாமல் களவு இல்லை.
- உள்ளூரிலே ஓணான் பிடிக்காதவன் உடுப்பியிலே போயி உடும்பு பிடிப்பானா?
- உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
- உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிச்சமில்லை.
- ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனை நட்பு இழுக்கும்.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் மற்றையவர்களைச் சந்தோஷப் படுத்திப் பார்ப்பது.
- துணிந்தவனுக்கு வாழ்க்கை ஒரு கரும்பு, பயந்தவனுக்கு வாழ்க்கை ஒரு வளைக்க முடியாத இரும்பு.
- எதிர்பார்ப்பு எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, ஏமாற்றமும் அவ்வளவு குறைவாக இருக்கும்.
- ஆனைக்கு ஒரு காலம். பூனைக்கு ஒரு காலம்.
- ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
- ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
- ஆறாவது பெண்ணானால் ஆறானது நீறாகி விடும்.
- ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி; ஆறு கடந்தால் நீ யார்? நான் யார்?
- ஆறு போவதே போக்கு; அரசன் சொல்வதே தீர்ப்பு.
- ஆறுகெட நாணல் இடு; ஊரு கெட நூலை விடு.
- ஆறுமில்லாப் பொண்ணுக்கு அண்டை வீட்டுக்காரன் அத்தை மகனாம்.
- ஆற்ற ஆள் இல்லை; தேற்ற யாரும் இல்லை.
- ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.
- ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
- ஆறு நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்.
- ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
- ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை.
- ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
- ஆழம் தெரியாமல் காலை விடாதே.
- ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலன் தரும்.
- ஆந்தைக்குத் தன் குஞ்சு ராஜாளிதான்.
- இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
- இட்ட உறவு எட்டு நாளைக்கு; நக்கின உறவு நாலு நாளைக்கு.
- இடிவிழுந்தபின் பஞ்சாங்கம் பார்த்து என்ன பண்ண?
- இனம் இனத்தோடே: வெள்ளாடு தன்னோடே.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- இன்று செய்யவேண்டியதை, நாளை என்று தள்ளிப்போடாதே!
- கோபம் அறிவீனத்தில் தொடங்கித் துக்கத்தில் முடிகின்றது.
- வந்த வழியை மறவாதிருந்தால் எந்த பதவியும் பறிபோகாதாம்.
- வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.
- பட்டம் பதவிக்கு பறக்காதே, அவை தாமே பறந்து வந்து உன் மடியில் விழ வேண்டும்.
- நல்ல சிந்தனைகள், நல்ல செயல்களாகப் பரிணமிக்கின்றன.
- பகுதிநேர வேலைகூட, முழுநேர வேலைக்கான படிக்கட்டாக அமையும்.
- உண்மை உள்ளத்தூய்மையை உண்டாக்கும், உள்ளத்தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி.
- உன் சொற்கள் எப்படியிருக்கிறதோ அந்தளவுக்கு நீ மதிக்கப்படுவாய்.
- பக்தி என்பது தனிச்சொத்து, கடவுள் என்பது பொதுச்சொத்து.
- பகைவனை அடக்குபவனைவிட ஆசைகளை அடக்குபவனே மாவீரன்.
- நீ ஏமாற்றியாக இருந்தால், உன்னை ஏமாளியாக்குவதற்கும் ஒருவனை இறைவன் படைப்பான்.
- உண்மையான பெரிய மனிதருக்கு முதல் அடையாளம் பணிவாக இருத்தல்.
- கடல் போல் செலவழி, ஆனால் எள் முனையளவேணும் வீணாக்காதே.
- பிறர்க்கு உதவி செய்ய எப்போதும் தயாராக இருங்கள்.
- நல்ல நண்பனைத் தேடிக்கொள்ளாதவன், தனக்குத் தானே பகைவன்.
- தொடங்குவதை நன்றாக தொடங்கினால், அதுவே பாதி வெற்றியாகும்.
- எதிர்காலத்தை திட்டமிடுங்கள், ஏனெனில் அதுதான் உங்கள் வாழ்க்கையில் மீதமுள்ள காலம்.
- உன் பொறாமையால் மற்றையவர்கள் தாழ்வதில்லை, நீ தான் தாழ்வாய்.
- ஒரே எண்ணம் உடையவர்கள் சேர்ந்தால், கடலையும் வற்றவைக்க முடியும்.
- மற்றையவர் கெஞ்சும் போது நீங்கள் மிஞ்சினால் அவர்கள் மிஞ்சும் போது நீங்கள் கெஞ்ச நேரிடும்.
- இடைவிடாத முயற்சியும் எப்போதும் மலர்ந்த முகமும் அறிவின் அறிகுறிகள்.
- ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான், அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்.
- தான் விரும்புவதை எல்லாம் செய்பவன் வல்லவன், தான் செய்வதை விரும்புபவன் அறிவாளி.
- அன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போடுகின்றாயோ அதற்கேற்ப நலம் பெறுவாய்.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- மறுமணம் என்பது வாழ்க்கையை இழந்தவருக்கே, வாழ்க்கையைத் துறந்தவருக்கல்ல.
- நொந்தவன் வாழ்க்கையைப் படிப்பினையாக எடுத்துக் கொள். உயர்ந்தவன் வாழ்க்கையைக் குறிக்கோளாக எடுத்துக் கொள்.
- வார்த்தைகளில் கனிவு வாழ்க்கைக்கு இனிமை.
- அழகோடு ஆணவம் கூடி நின்றால், அந்த ஆணவமே அழகை அழித்துவிடும்.
- அறிஞனுக்கு ரோஜாவின் அழகும் மணமும் தெரியும், முட்டாளுக்கு முள் மட்டுமே தெரியும்.
- மனைவிக்கு உலகமாய் இரு, ஆனால் மனைவிதான் உலகம் என்று இருந்துவிடாதே.
- நெருங்கி இருந்த நண்பன் விலகிப் போனாலும் ஆபத்து, விலகி இருந்த எதிரி நெருங்கி வந்தாலும் ஆபத்து.
- விளக்கு எரிந்தால் அதன் எண்ணெய் குறையும், உன் மனம் எரிந்தால் உன் எண்ணம் தேயும்.
- காதலைச் சொல்ல ஒரு நொடி போதும்: ஆனால், அதை நிரூபிக்க ஒரு வாழ்க்கை வேணும்.
- பணிந்து வாழ்ந்தால் உயர்ந்து போவாய்: நிமிர்ந்து திரிந்தால் இறங்கி வருவாய்.
- கடன் கொடுத்தவனுக்குக் கோபம் கூடாது, கடன் வாங்கியவனுக்கு ரோசம் கூடாது.
- நெஞ்சில் வஞ்சம் கொஞ்சமும் இன்றி மனைவியை நேசித்துப் பார், உன் தெய்வம் பூஜையறையில் இல்லை, படுக்கையறையில்.
- இளமையும் அன்பும் வசந்த காலப் பரிசு, அவற்றை நீயே எடுத்து அனுபவித்துக் கொள்.
- பெண் சுதந்திரம் என்பது ஆண்களை அடிமையாக்குவதல்ல.
- அற்ப சலுகைகளுக்காக மதம் மாறுபவன் சொற்ப சலுகைகளுக்காக மனைவியை மாற்ற மாட்டானா?
- மனிதரை மனிதர் சமமாய் மதிப்பது கடமை.
- குற்றத்தை ஒப்புக் கொண்டாலே பாதி மன்னிப்புக் கிடைத்துவிடும்.
- மனைவியும் கம்ப்யூட்டரும் ஒன்று: புரிந்துகொண்டால் சொர்க்கம், இல்லையென்றால் நரகம்.
- பிரமண் படைப்பில் அழகும் இருக்கும் அகோரமும் இருக்கும்: ஆனால் உணர்ச்சிகள் ஒரே மாதிரியானவை.
- சீதனம் வாங்கிச் செய்யும் திருமணம் காதலின் அருமை காணா வெறுமணம்.
- சொல்லிய வார்த்தைக்கு நீ அடிமை சொல்லாத வார்த்தை உனக்கு அடிமை.
- புன்னகையில் ஆரம்பி, சிரிப்பில் நிறைவேற்று.
- தாலியும் மழலையும் அடிமை விலங்கென கொள்ளும் மாதரே, உம் மடமைதனைக் கொளுத்துவீர்.
- முயன்று தோற்பது கௌரவம் முயலாமல் இயலாது என்பது கேவலம்.
- உன் எரிச்சல் உன்னை எரிக்குமே தவிர பிறரை எரிக்காது.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- கீழ்ப்படிதல் மட்டுமே, கட்டளையிடுவதற்கான உரிமையை அளிக்கிறது.
- ஆற்றல் உடையவனாய் இருப்பதை விட, நேர்மை உடையவனாய் இருப்பது மேல்.
- வெற்றியின் வேர்களை முயற்சி என்னும் மண் தான் பலப்படுத்தும்; மற்றவை பாழ்படுத்தும்.
- குழந்தைகளுக்கு கீழ்படிதல் முதல் பாடமாக இருக்கட்டும். இரண்டாவது பாடத்தை உன் இஷ்டப்படி கற்றுக் கொடு.
- நீ கோபம் கொள்ளும் ஒவ்வொரு நிமிடமும் அறுபது விநாடி மகிழ்ச்சியை இழக்கிறாய்.
- தன் துன்பத்தில் இன்பத்தைத் தேடுபவன் மனிதன் அடுத்தவர் துன்பத்தில் இன்பப்படுபவன் மிருகம்.
- துயரம் ஒரு மணி நேரத்தை, பத்து மணி நேரமாக்குகிறது.
- எதையும் புரிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் மனதை அமைதிப் படுத்த வேண்டும்.
- ஒவ்வொரு புதிய செயலின் போதும் உங்கள் பழைய எண்ணத்தைப் பயன்படுத்துங்கள்.
- தைரியமுள்ளவன் அன்பையும், அதிர்ஷ்டத்தையும் நண்பனாக்கிக் கொள்கிறான்.
- அதிர்ஷ்டத்தினை நம்பி உழைப்பினை மறப்பது முட்டாள் தனம்.
- வென்றவன் அனைத்திலும் புத்திசாலியல்ல தோற்றவன் அனைத்திலும் முட்டாளல்ல.
- கோபமாக இருக்கும் போது, கடிதத்திற்க்குக் பதில் எழுதாதே.
- இனிமையாக பேசினால் இதயங்களை ஈர்க்கலாம் எளிமையாக வாழ்ந்தால் பேராசைகளை நீக்கிடலாம்.
- உண்மையான நட்பிற்கு முன்னால் கோபம், வெறுப்பு, பகை இவையெல்லாம் ஒன்றுமேயில்லை.
- இரவு வந்து விட்டால், ஒரு நாத்தீகன் கூட கடவுளைப் பாதி நம்புகிறான்.
- உழைப்பில்லாமல் எதையும் பெற முடியாது என்பது இயற்கை வகுத்த சட்டமாகும்.
- கடமையை செய்வதுதான் உனது பணி. அதன் பலன்கள் மீது உனக்கு அதிகாரமில்லை.
- தனது தாய்நாட்டை நேசிக்காதவன் எதையுமே நேசிக்க முடியாது.
- பாவம் செய்கின்ற மனிதனுடைய செயல்களே அவனை அழிவுக்கு கொண்டு போகின்றன.
- சுதந்திரம் தருபவர் முன் அடங்கி இரு; அடக்குபவர் முன் சுதந்திரமாய் இரு.
- நாட்டுக்காக ஒருவர் உயிர்த்தியாகம் செய்வது நல்லது. அது பெருமை மிக்கது.
- பிச்சை எடுப்பதைக் காட்டிலும், அதிகம் சிறந்தது அல்ல கடன் வாங்குதல்.
- மாட்டுப்பொங்கல் தினத்தன்று மாட்டுக்குக் பொங்கலிடாவிடினும் மாட்டை பொங்கலிடாதீர்கள்.
- உனது வலது கை செய்வதை, இடது கை அறியாமலிருப்பதே தர்மம்.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- புறம் பேசும் உறவுக்காரனை விட, போட்டி போடும் அயலானே நல்லவன்.
- பிறருடைய தவறுகளை நீ மன்னித்தால் தான் உன்னுடைய தவறுகள் மன்னிக்கப்படும்.
- உள்ளார்க்கு செல்வங்கள் சொந்தம், அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்.
- முதுமையை அலட்சியம் செய்யாதே. அது உன்னையும் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
- கடனாகக் கொடுப்பதை விட இனாமாகக் கொடுப்பது நல்லது.
- சொல்லானது அம்பு போல, ஒரு முறை எய்து விட்டால் திரும்பப் பெற முடியாது.
- இறைவனிடம் மனம் ஈடுபடுவதைப் பொறுத்து விதியின் கொடுமை குறையும்.
- முயன்று தோற்பது கௌரவம் முயலாமல் இயலாது என்பது கேவலம்.
- ஒவ்வொரு சோதனையும் நமக்கு பயனான படிப்பினை ஒன்றை போதிக்கிறது.
- நினைத்த காரியத்தை இடையில் ஏற்படும் தோல்விக்காக கை விட்டு விடாதே.
- உண்மையான பெரிய மனிதனுக்கு முதல் அடையாளம் பணிவாக இருத்தல்.
- எளிய மனிதர்களுக்கு உதவுவதின் மூலமே, பெரிய மனிதர்களின் பெருந்தன்மை வெளிப்படும்.
- ஒரு வினாடியில் நாம் செய்யும் தவறு வாழ்நாள் முழுவதும் வேதனை தரும்.
- உனக்கு தெரிந்தவற்றை மட்டும் நீ செய் தெரியாததில் தலையிடாதே.
- பணத்தை சேர்ப்பது பெரிய சாதனை, அதை விட பெரிய சாதனை அதைக் காப்பது.
- நன்மைகளைப் பேசத் தெரியாவிட்டாலும் தீமைகளை ஏசத் தெரிய வேண்டும்.
- மகிழ்ச்சிகரமான எதிர்காலத்தை நம்பாதே உயிருள்ள நிகழ்காலத்தில் செயல்படு.
- மருத்துவத்தை விட, திட்டமிட்ட உணவு முறை அதிக நலனை உண்டாக்கும்.
- துன்பங்களைக் கண்டு துவளாதே, கயவர்களை கண்டு கலங்காதே, வெற்றியைக் கண்டு வியப்படையாதே.
- எது அழகாக இருக்கிறதோ அது மரிப்பதே இல்லை மற்ற அழகுகளினுள் கலந்து விடுகிறது.
- பிள்ளைக்கு கல்வி கற்க ஏற்பாடு செய்யாதவன் ஒரு திருடனை உருவாக்குகிறான்.
- எல்லாம் தெரிந்ததாக நடிப்பவனைக் காட்டிலும் எதையும் தெரிந்து கொள்ளத் துடிப்பவர் சிறந்தவர்.
- தூங்கினேன், வாழ்வே அழகு என்று கனவு கண்டேன். விழித்தெழுந்தேன், வாழ்வே கடமை என்று உணர்ந்தேன்.
- படித்த இளைஞனுக்கு வேலை தராத சமுதாயம் ஒரு தீவிரவாதியை உருவாக்குகிறது.
- வெற்றியில் கற்றுக் கொள்வதை விட தோல்வியில் தான் அதிகமாக கற்றுக் கொள்கிறோம்.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- தவறு சிறியதாய் இருக்கும் போதே திருத்திக் கொள்.
- எதிரி யானை போல இருந்தாலும், நீ அவனை எறும்பு போல கருது.
- நம்முடைய பொருளாதார நிலவரத்துக்கு ஏற்றபடிதான் வாழ வேண்டும்.
- பெருமையோடு இல்லாமல் பொறுமையோடு இருப்பவளே பெண்.
- மனிதர்களின் செய்கைகள் நடவடிக்கைகள் ஒரு புத்தகத்தின் முன்னுரையை போன்றது.
- இளமையில் வேலைக்காரனாக இருந்தால் முதுமையில் எஜமானாக இருக்கலாம்.
- நம்பிக்கையும், பிரார்த்தனையும் இல்லாத தொழில் வெற்றி பெறாது.
- பணத்தை இழந்தால் சொற்ப நஷ்டம், நேரத்தை இழந்தால் எல்லாமே நஷ்டம்.
- அன்பாயிரு அடிமையாயிராதே ஏழையாயிரு கோழையாயிராதே.
- உழைப்பே ஓய்வுக்குத் திறவுகோல் சுறுசுறுப்பே செல்வத்திற்க்குத் திறவுகோல்.
- உள்ளத்தோடு போராடுவதே உண்மையான போராட்டம் அதுவே உண்மையான வெற்றியும் கூட.
- அண்டை வீட்டுக்காரனிடம் அன்பு கொள் ஆனால் வேலியை மட்டும் விலக்கி விடாதே.
- நம்மை விடச் சிலர் தாழ்ந்தவர் என்று கருதுவது தவறு மட்டுமல்ல, பாவமும் ஆகும்.
- உனக்கு என்ன தீங்கு நேரிட்டாலும், அது உன் கைகளால் செய்த செயலின் விளைவுகளே.
- உன்னிடத்தில் இல்லா விட்டால் பட்டினியாயிரு அடுத்தவனிடத்தில் கை ஏந்தாதே.
- மனிதனுடைய சுபாவங்கள் வெளிப்படுவது பிரச்சனையில் மாத்திரமே.
- வாழ்க்கை பயணத்தில் நம்முடன் பயணிப்பவர்கள் இன்பம், துன்பம் என்னும் இருவர்.
- உன் பொறாமையால் மற்றவர்கள் தாழ்வதில்லை நீதான் தாழ்வடைகிறாய்.
- நீ பெரியவனாக உயரும் போது, மற்றவனை சிறியவனாக நினைத்தால் நீயும் சிறியவன்தான்.
- அவசியமில்லாததை வாங்கினால் விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.
- பிறர் பாரத்தைத் தாங்கக் கை கொடுத்தால் நம்முடைய பாரம் தானாகவே குறையும்.
- இன்று நல்லதையே பேசி, நல்லதையே எழுது நாளைய சந்ததி உன்னை பின்பற்றும்.
- ஊக்கம் கடனை அடைக்கும். ஏக்கம் அதனை அதிகமாக்கும்.
- ஆசை பேராசையானாலும் அன்பு வெறியானாலும் அமைதி தூர விலகி விடும்.
- பாராட்டுவதற்குக் கை குலுக்கியவரை மறந்தாலும் அதை பெருவதற்க்கு கை கொடுத்தவரை மறவாதே.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- உழைப்பால் பிழைப்பைத் தேடிக்கொண்டு, பிறரிடம் கை நீட்டாதவன் கடவுளுக்கு மிகவும் பிரியமானவன்.
- உள்ளத்தில் அன்பு இருந்தால் மட்டும் போதாது அது செயலில் வெளிப்பட வேண்டும்.
- கோயிலுக்கு தங்கத்தை அளிப்பதை விட ஒரு ஏழையின் வாழ்க்கைக்கு உதவுவது மேலானது.
- வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும்.
- முடிவெடுக்கும் ஆற்றல் உன்னிடம் வளர வளர நீ தேர்ந்தெடுப்பதில் குழப்பம் மறையும்.
- தனது பசியை அடக்கிக் கொண்டவன், மனித சுபாவத்தையே வெற்றி கொண்டவன்.
- உழைப்பே உயர்வுக்குத் திறவுகோல் சுறுசுறுப்பே செல்வத்திற்க்குத் திறவுகோல்.
- மனதை நீ இயக்கினால் ஆற்றல், அது தானாக இயங்கினால் ஆபத்து.
- பண்பாடு குன்றிய இடத்தில்தான் பகைமை உணர்ச்சி அதிகம் காணப்படும்.
- நெருக்கமாய் இரு, ஆனால் கீழ்த்தரமாய் ஒருபோதும் இராதே.
- மன்னிக்கும் குணம் மனிதனுக்கு உயர்வானது அது தர்மத்தை விட பலமடங்கு உயர்வு.
- நாணயமாக நடப்பவர்கள் ஒளிக்கும் இருளுக்கும் அஞ்சுவதில்லை.
- சாட்சிக்காரன் காலில் விழுவதை விட, சண்டைக்காரன் காலில் விழுந்து விடலாம்.
- தகுதிக்கு தக்கவாறு வாழாதவன் வாழ்க்கை தீராத கவலையில் முடியும்.
- மனிதனின் இதயத்தைத் திறப்பது அவனை அறியாமல் எழும் சிரிப்புதான்.
- அடக்கமுள்ள மனிதன் தன்னைப் பற்றி பேசிக் கொண்டு திரியமாட்டான்.
- உடலுக்கு உழைப்பு போன்று உள்ளத்துக்குத் துன்பங்கள் பலத்தைத் தரும்.
- ஞானிகள் விலகியிருப்பது உலகத்தை வெறுக்க அல்ல, அதனை அறியவேதான்.
- கடுமையான உழைப்பைத் தவிர வெற்றிக்கு வேறு வழியில்லை.
- செல்வம் என்பது வருமானத்தைப் பொருத்தல்ல நிர்வாகத் திறமையை பொருத்தது.
- கண்டிக்கத் தெரியாதவனுக்குக் கருணை காட்டவும் தெரியாது.
- இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறாயோ அதைப்பற்றி மட்டுமே நினைக்க வேண்டும்.
- நாளைய தினத்தைக் குறித்து கவலைப்படாதே ஒருநாளும் பிறப்பிப்பதை நீ அறியாயே.
- மலையளவு சொல்லை விட கடுகளவு செயல் மிகச்சிறந்தது.
- காலத்தின் மதிப்பை நீ அறிந்திருந்தால் வாழ்வின் மதிப்பையும் அறிந்திருப்பாய்.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )