Tuesday, April 29, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -27 )

  • உண்மையைத் தவிர வேறு எதுவுமே அழகில்லை.
  • நலமான உடல் ஆன்மாவின் கோயில், நலிவான உடல் ஆத்மாவின் சிறைச்சாலை.
  • எல்லா உண்மைகளும் சொல்வதற்காக இல்லை.
  • உண்மை சொல்லிக் கெட்டாரும் இல்லை. பொய் சொல்லி வாழ்ந்தாரும் இல்லை.
  • உண்மை பலம் வாய்ந்ததாக இருப்பதால் அது ஜெயிக்கும்.
  • வயிற்றை எளிதில் நிரப்பிவிடலாம். கண்ணையும் மனதையும் திருப்தி செய்வது மிகவும் கடினம்.
  • நீ நிமிடங்களைக் கவனித்துக் கொண்டால், மணி நேரங்கள் அவைகளாகவே கவனித்துக் கொள்ளும்.
  • நம் வாழ்க்கையில் முன்னேறும்பொழுது தான் நம் திறமைகளின் எல்லைகளைக் கற்றுக் கொள்கிறோம்.
  • உயர்வும் நல்லவைகளும் கருவிச் சாதனங்கள் அல்ல. அவைகள் முடிவுகள்.
  • பொறுமை கசக்கும். ஆனால், அதன் பழம் இனிமையானது.
  • பணம் அறிவாளிக்கு தொண்டு புரிகிறது. முட்டாளை ஆட்சி செய்கிறது.
  • பொறுமையும், காலமும், பலத்தையும் உணர்ச்சியையும் விட சிறந்தது.
  • அறியாமையின் குழந்தைதான் தப்பான அபிப்பிராயம்.
  • குறைந்த வார்த்தை மேலான பிரார்த்தனையாகும்.
  • கெட்ட பழக்கங்கள் வருவது எளிது. வந்தபின் கை விடுவது கடினம்.
  • எல்லா பெரிய மனிதர்களும் நடுத்தரக் குடும்பத்திலிருந்து தான் வருகிறார்கள்.
  • கவரச்சிகள் பார்வையை ஈர்க்கின்றன. ஆனால் திறமை ஆத்மாவை வெல்லுகிறது.
  • புத்திசாலித்தனம் குறைந்திருப்பதைவிட பைசா குறைந்து இருப்பது நல்லது.
  • குழைந்தைகாகப் பெற்றோர் வைத்திருக்கும் சிநேகம், அன்பு மாதிரி வேறெதுவுமில்லை.
  • எதிரிக்குப் பதில் அளிக்குமுன் அவனைப் புரிந்து கொள்.
  • நல்ல பழக்கங்கள் வருவது கடினம். வந்தபின் கடைப்பிடிப்பது எளிது.
  • வீம்பு பேசுகிறவன் அழிவான்; வீரியம் பேசுகிறவன் விழுவான்.
  • உன்னுடைய செய்கைகளைக் கவனி, அவைகள் உன்னுடைய பழக்கங்கள் ஆகும்.
  • பொது அறிவு ஒரு உள்ளுணர்வு. அதன் அதிகம் தான் மேதாவித்தனம்.
  • அறிவாளியின் ஒரு நாளைய வாழ்வு, முட்டாளின் ஆயுட்கால வாழ்வுக்குச் சமம்.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

No comments:

Post a Comment