Tuesday, April 29, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -30 )

  • மற்றவர்களை அறிந்தவன் படித்தவன். அவனைப் பற்றியே அறிந்தவன் அறிவாளி.
  • தந்தையின் அன்பு சுடுகாடு வரை மட்டும்தான். ஆனால், தாயன்பு என்றென்றும் உள்ளது.
  • மனிதர்கள் அவர்களின் தாயார்களால் உண்டாக்கப்பட்டவர்கள் தான்.
  • செயலற்ற தன்மை உன்னை மாற்றாது. செயல்படும் வேகமே மாற்றும்.
  • திருமணத்திற்கு அழைப்பின் பேரில் செல். சாவுக்கு அழையாவிட்டாலும் செல்.
  • ஒரு துளி மையிலிருந்து பிறக்கும் கருத்துக்கள் பல்லாயிரம் பேரைச் சிந்திக்க வைக்கும்.
  • பெண்களின் உரிமைகளிலெல்லாம் பெரிய உரிமை ஒரு தாயாக இருப்பதுதான்.
  • அழகிய மலர்கள் வயலோரத்தில் நீண்டகாலம் நிலைத்திருக்காது.
  • எவன் ஒருவன் தனித்து அதிகம் நிற்கிறானோ, அவன் தான் மிகப் பலமானமனிதன்.
  • கால்களில் நிற்கும் உழவன் முழங்காலில் மண்டியிட்டு இருக்கும் சான்றோனை விட மேலானவன்.
  •  ஒருவர் தானே ஏமாறுவது மாதிரி, மற்றவரால் மிக அதிகமாக ஏமாற்றப்படவில்லை.
  • அடக்கம் ஒரு ஆபரணம் மாத்திரமல்லாமல், நற்குணத்திற்கு ஒரு காவலன்.
  • ஒருவன் தன் சொந்தத் தனித் தன்மையை விடுத்து, வேறொரு மனிதன் ஆகக் கூடாது.
  • மூட நம்பிக்கை மனவலிமை இல்லாதவர்களின் மதம்.
  • ஒரு வசீகரமான கடுஞ்சொல் ஆயிரம் கேவலங்களுக்குச் சமம்.
  • அவசரத்தில் திருமணம் செய்யின், ஓய்வு நேரத்தில் வருந்த வேண்டும்.
  • தேளுக்கு அதிகாரம் கொடுத்தால், அது நொடிக்கு நொடி கொட்டும்.
  • வாதத்திற்கு மருந்து உண்டு. பிடிவாதத்திற்கு மருந்தில்லை.
  • சிறு சிறு வெட்டுக்கள் தான் பெரிய மரங்களை வீழ்த்துகின்றன.
  • ஒரு நல்லது செய்ய கெட்ட நேரம் என்று ஒன்று எப்போதுமில்லை.
  • அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொள்ள, எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
  • அதிகம் வைத்திருப்பவன் பணக்காரன் அல்ல. அதிகம் கொடுப்பவனே பணக்காரன்.
  • ஒரு பொய், ஈட்டியை விட ஆழமான காயத்தை உண்டாக்கும்.
  • பிறகு என்பதும், பேசாமலிருப்பதும் இல்லையென்பதற்குச் சமம்.
  • உன்னுடைய தவறுகளை மற்றவர்கள் மிகைப்படுத்துவதற்கு முன்னால் ஒப்புக்கொள்.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

No comments:

Post a Comment