Saturday, March 22, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -12)

  • இன்று செய்யவேண்டியதை, நாளை என்று தள்ளிப்போடாதே!
  • கோபம் அறிவீனத்தில் தொடங்கித் துக்கத்தில் முடிகின்றது.
  • வந்த வழியை மறவாதிருந்தால் எந்த பதவியும் பறிபோகாதாம்.
  • வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.
  • பட்டம் பதவிக்கு பறக்காதே, அவை தாமே பறந்து வந்து உன் மடியில் விழ வேண்டும்.
  • நல்ல சிந்தனைகள், நல்ல செயல்களாகப் பரிணமிக்கின்றன.
  • பகுதிநேர வேலைகூட, முழுநேர வேலைக்கான படிக்கட்டாக அமையும்.
  • உண்மை உள்ளத்தூய்மையை உண்டாக்கும், உள்ளத்தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி.
  • உன் சொற்கள் எப்படியிருக்கிறதோ அந்தளவுக்கு நீ மதிக்கப்படுவாய்.
  • பக்தி என்பது தனிச்சொத்து, கடவுள் என்பது பொதுச்சொத்து.
  • பகைவனை அடக்குபவனைவிட ஆசைகளை அடக்குபவனே மாவீரன்.
  • நீ ஏமாற்றியாக இருந்தால், உன்னை ஏமாளியாக்குவதற்கும் ஒருவனை இறைவன் படைப்பான்.
  • உண்மையான பெரிய மனிதருக்கு முதல் அடையாளம் பணிவாக இருத்தல்.
  • கடல் போல் செலவழி, ஆனால் எள் முனையளவேணும் வீணாக்காதே.
  • பிறர்க்கு உதவி செய்ய எப்போதும் தயாராக இருங்கள்.
  • நல்ல நண்பனைத் தேடிக்கொள்ளாதவன், தனக்குத் தானே பகைவன்.
  • தொடங்குவதை நன்றாக தொடங்கினால், அதுவே பாதி வெற்றியாகும்.
  • எதிர்காலத்தை திட்டமிடுங்கள், ஏனெனில் அதுதான் உங்கள் வாழ்க்கையில் மீதமுள்ள காலம்.
  • உன் பொறாமையால் மற்றையவர்கள் தாழ்வதில்லை, நீ தான் தாழ்வாய்.
  • ஒரே எண்ணம் உடையவர்கள் சேர்ந்தால், கடலையும் வற்றவைக்க முடியும்.
  • மற்றையவர் கெஞ்சும் போது நீங்கள் மிஞ்சினால் அவர்கள் மிஞ்சும் போது நீங்கள் கெஞ்ச நேரிடும்.
  • இடைவிடாத முயற்சியும் எப்போதும் மலர்ந்த முகமும் அறிவின் அறிகுறிகள்.
  • ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான், அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்.
  • தான் விரும்புவதை எல்லாம் செய்பவன் வல்லவன், தான் செய்வதை விரும்புபவன் அறிவாளி.
  • அன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போடுகின்றாயோ அதற்கேற்ப நலம் பெறுவாய்.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

No comments:

Post a Comment