Wednesday, March 19, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -1 )

  • எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் புத்திசாலியின் பார்வை இலக்கை நோக்கியே இருக்கும்.
  • கல்வியின் வேர் கசப்பானது: ஆனால் அது இன்பமான பழக்கத்தைத் தருகின்றது.
  • கோணல் இல்லாத தென்னை மரத்தையும், விவாதத்தில் சளைக்கும் பெண்ணையும் காண்பது அறிவு.
  • எவர் துன்பத்தையும் தெரிந்து கொள், ஆனால் உன் துன்பத்தைக் கூறி விடாதே.
  • கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது போல.
  • கோமளவல்லிக்கு  ஒரு மொழி கோளாறுக்காரிக்கு  பல மொழி.
  • எதுவும் தெரியாதவனுக்கு எதற்கெடுத்தாலும் சந்தேகம்தான்.
  • கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான், மரம் ஏறி கைவிட்டவனும் கெட்டான்.
  • சமையலறை முதலில் வீட்டை விழுங்கி முடிவில் தன்னையும் விழுங்கி விடும்.
  • எறும்பின் கண் அதன் அளவிற்குப் பெரியது. யானையின் கண் அதன் அளவிற்குச் சிறியது.
  • கடுக்காய்க்கு மிஞ்சிய மருந்துமில்லை, கண்ணனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
  • சங்கிலே வார்த்தால் தீர்த்தம். செம்பிலே வார்த்தால் தண்ணீர்.
  • ஏழைக்கு ஒரு போதும் வாக்கு கொடுக்காதே பணக்காரனுக்கு ஒரு போதும் கடன்படாதே.
  • சகோதரனைப் போன்ற நண்பனில்லை. சகோதரனைப் போன்ற எதிரியில்லை.
  • கார்த்திகைக்குப் பின் மழை இல்லை; கர்ணனுக்குப் பின் கொடை இல்லை.
  • சமுத்திர அலை ஓயப்போவதில்லை. தம்பி தலை முழுகித் தர்ப்பணம் பண்ணப் போவதுமில்லை.
  • துளசிக்கு வாசமும், முள்ளுக்குக் கூர்மையும் முளைக்கிறபோதே  தெரியும்.
  • நண்பர்களைப் பற்றி நிறைய பேசுங்கள்; வேண்டாதவர்களைப் பற்றி ஒன்றும் பேசாதீர்கள்.
  • சாட்டை அடியும், சவுக்கு அடியும் பொறுக்கலாம், மூட்டை பூச்சுக்கடியும், முணுமுணுப்பும் ஆகாது.
  • நம்பிக்கை குதிரைகள் விரைந்து செல்லும், அனுபவக் குதிரைகள் மெதுவாகத்தான் செல்லும்.
  • தீங்கு செய்யாதிருத்தலே நன்மைகளில் எல்லாம் முதன்மையானதாகும்.
  • சிறு குழந்தை இல்லாத வீடும் வீடு அல்ல, சீரகம் இட்டு ஆக்காத கறியும் கறி அல்ல.
  • பனை மரத்தின் கீழே இருந்து பால் குடித்தாலும் கள் குடித்ததாகத்தான் சொல்வார்கள்.
  • நமது செல்வம் நம்மை அதிகாரம் செய்யத் தொடங்கினால் நாம் ஏழைகளே.
  • சித்திரை மாதத்தில் சிறந்து உழுத புழுதியிலே கத்தரி நடாமல் கரும்பு நட்டு வீனானேன்.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

No comments:

Post a Comment