Saturday, March 22, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -11 )

  • மறுமணம் என்பது வாழ்க்கையை இழந்தவருக்கே, வாழ்க்கையைத் துறந்தவருக்கல்ல.
  • நொந்தவன் வாழ்க்கையைப் படிப்பினையாக எடுத்துக் கொள். உயர்ந்தவன் வாழ்க்கையைக் குறிக்கோளாக எடுத்துக் கொள்.
  • வார்த்தைகளில் கனிவு வாழ்க்கைக்கு இனிமை.
  • அழகோடு ஆணவம் கூடி நின்றால், அந்த ஆணவமே அழகை அழித்துவிடும்.
  • அறிஞனுக்கு ரோஜாவின் அழகும் மணமும் தெரியும், முட்டாளுக்கு முள் மட்டுமே தெரியும்.
  • மனைவிக்கு உலகமாய் இரு, ஆனால் மனைவிதான் உலகம் என்று இருந்துவிடாதே.
  • நெருங்கி இருந்த நண்பன் விலகிப் போனாலும் ஆபத்து, விலகி இருந்த எதிரி நெருங்கி வந்தாலும் ஆபத்து.
  • விளக்கு எரிந்தால் அதன் எண்ணெய் குறையும், உன் மனம் எரிந்தால் உன் எண்ணம் தேயும்.
  • காதலைச் சொல்ல ஒரு நொடி போதும்: ஆனால், அதை நிரூபிக்க ஒரு வாழ்க்கை வேணும்.
  • பணிந்து வாழ்ந்தால் உயர்ந்து போவாய்: நிமிர்ந்து திரிந்தால் இறங்கி வருவாய்.
  • கடன் கொடுத்தவனுக்குக் கோபம் கூடாது, கடன் வாங்கியவனுக்கு ரோசம் கூடாது.
  • நெஞ்சில் வஞ்சம் கொஞ்சமும் இன்றி மனைவியை நேசித்துப் பார், உன் தெய்வம் பூஜையறையில் இல்லை, படுக்கையறையில்.
  • இளமையும் அன்பும் வசந்த காலப் பரிசு, அவற்றை நீயே எடுத்து அனுபவித்துக் கொள்.
  • பெண் சுதந்திரம் என்பது ஆண்களை அடிமையாக்குவதல்ல.
  • அற்ப சலுகைகளுக்காக மதம் மாறுபவன் சொற்ப சலுகைகளுக்காக மனைவியை மாற்ற மாட்டானா?
  • மனிதரை மனிதர் சமமாய் மதிப்பது கடமை.
  • குற்றத்தை ஒப்புக் கொண்டாலே பாதி மன்னிப்புக் கிடைத்துவிடும்.
  • மனைவியும் கம்ப்யூட்டரும் ஒன்று: புரிந்துகொண்டால் சொர்க்கம், இல்லையென்றால் நரகம்.
  • பிரமண் படைப்பில் அழகும் இருக்கும் அகோரமும் இருக்கும்: ஆனால் உணர்ச்சிகள் ஒரே மாதிரியானவை.
  • சீதனம் வாங்கிச் செய்யும் திருமணம் காதலின் அருமை காணா வெறுமணம்.
  • சொல்லிய வார்த்தைக்கு நீ அடிமை சொல்லாத வார்த்தை உனக்கு அடிமை.
  • புன்னகையில் ஆரம்பி, சிரிப்பில் நிறைவேற்று.
  • தாலியும் மழலையும் அடிமை விலங்கென கொள்ளும் மாதரே, உம் மடமைதனைக் கொளுத்துவீர்.
  • முயன்று தோற்பது கௌரவம் முயலாமல் இயலாது என்பது கேவலம்.
  • உன் எரிச்சல் உன்னை எரிக்குமே தவிர பிறரை எரிக்காது.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

No comments:

Post a Comment