- உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
- உடல் ஒருவனுக்குப் பிறந்தது: நாக்கு பலருக்குப் பிறந்தது.
- உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
- உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
- உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
- உடுத்திக் கெட்டான் பார்ப்பான்; உண்டு கெட்டான் வெள்ளாளன்.
- உண்ட உடம்பிற்கு உறுதி; உழுத புலத்தில் நெல்லு.
- உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
- உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
- உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
- உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
- உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
- உரலில் தலையை விட்ட பிறகு உலக்கைக்கு அஞ்சலாமா?
- உரலுக்கு ஒரு பக்கம் இடி: மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி.
- உரல் போய் மத்தளத்திடம் முறையிட்டதாம்.
- உறவு போகாமல் கெட்டது; கடன் கேட்காமல் கெட்டது.
- உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.
- உலை வைத்த சந்திலே சாறு காய்ச்சுவது போல்.
- உலோபிக்கு இரட்டை செலவு.
- உலோபியிடம் யாசித்தல் கடலில் கேணி வெட்டுவது போல.
- உளவு இல்லாமல் களவு இல்லை.
- உள்ளூரிலே ஓணான் பிடிக்காதவன் உடுப்பியிலே போயி உடும்பு பிடிப்பானா?
- உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
- உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிச்சமில்லை.
- ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனை நட்பு இழுக்கும்.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
No comments:
Post a Comment