- சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் மற்றையவர்களைச் சந்தோஷப் படுத்திப் பார்ப்பது.
- துணிந்தவனுக்கு வாழ்க்கை ஒரு கரும்பு, பயந்தவனுக்கு வாழ்க்கை ஒரு வளைக்க முடியாத இரும்பு.
- எதிர்பார்ப்பு எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, ஏமாற்றமும் அவ்வளவு குறைவாக இருக்கும்.
- ஆனைக்கு ஒரு காலம். பூனைக்கு ஒரு காலம்.
- ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
- ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
- ஆறாவது பெண்ணானால் ஆறானது நீறாகி விடும்.
- ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி; ஆறு கடந்தால் நீ யார்? நான் யார்?
- ஆறு போவதே போக்கு; அரசன் சொல்வதே தீர்ப்பு.
- ஆறுகெட நாணல் இடு; ஊரு கெட நூலை விடு.
- ஆறுமில்லாப் பொண்ணுக்கு அண்டை வீட்டுக்காரன் அத்தை மகனாம்.
- ஆற்ற ஆள் இல்லை; தேற்ற யாரும் இல்லை.
- ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.
- ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
- ஆறு நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்.
- ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
- ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை.
- ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
- ஆழம் தெரியாமல் காலை விடாதே.
- ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலன் தரும்.
- ஆந்தைக்குத் தன் குஞ்சு ராஜாளிதான்.
- இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
- இட்ட உறவு எட்டு நாளைக்கு; நக்கின உறவு நாலு நாளைக்கு.
- இடிவிழுந்தபின் பஞ்சாங்கம் பார்த்து என்ன பண்ண?
- இனம் இனத்தோடே: வெள்ளாடு தன்னோடே.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
No comments:
Post a Comment