- ஊனுக்கு முந்து; வேலைக்குப் பிந்து.
- ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.
- ஊரார் பண்டம் உமி போல்; தன் பண்டம் தங்கம் போல.
- ஊர் இருக்கு பிச்சை போட; ஓடு இருக்கு வாங்கிக்கொள்ள.
- ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
- ஊர் எல்லாம் சுற்றி; என் பேர் முக்தி.
- ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
- எங்கே வெலைஞ்சாலும் காஞ்சிரங்காய் தேங்காயாகுமா?
- எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
- எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
- எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
- எதார்த்தவாதி வெகுசன் விரோதி.
- எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
- எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்க வேண்டும்.
- எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
- எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
- எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்.
- எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
- எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
- எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
- எறும்பு ஊற கல்லும் தேயும்.
- எறும்புந் தன் கையால் எண் சாண்.
- எலி அழுதால் பூனை விடுமா?
- எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
- எலி வலை யானாலும் தனி வலை வேண்டும்.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
- உடல் ஒருவனுக்குப் பிறந்தது: நாக்கு பலருக்குப் பிறந்தது.
- உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
- உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
- உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
- உடுத்திக் கெட்டான் பார்ப்பான்; உண்டு கெட்டான் வெள்ளாளன்.
- உண்ட உடம்பிற்கு உறுதி; உழுத புலத்தில் நெல்லு.
- உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
- உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
- உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
- உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
- உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
- உரலில் தலையை விட்ட பிறகு உலக்கைக்கு அஞ்சலாமா?
- உரலுக்கு ஒரு பக்கம் இடி: மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி.
- உரல் போய் மத்தளத்திடம் முறையிட்டதாம்.
- உறவு போகாமல் கெட்டது; கடன் கேட்காமல் கெட்டது.
- உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.
- உலை வைத்த சந்திலே சாறு காய்ச்சுவது போல்.
- உலோபிக்கு இரட்டை செலவு.
- உலோபியிடம் யாசித்தல் கடலில் கேணி வெட்டுவது போல.
- உளவு இல்லாமல் களவு இல்லை.
- உள்ளூரிலே ஓணான் பிடிக்காதவன் உடுப்பியிலே போயி உடும்பு பிடிப்பானா?
- உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
- உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிச்சமில்லை.
- ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனை நட்பு இழுக்கும்.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் மற்றையவர்களைச் சந்தோஷப் படுத்திப் பார்ப்பது.
- துணிந்தவனுக்கு வாழ்க்கை ஒரு கரும்பு, பயந்தவனுக்கு வாழ்க்கை ஒரு வளைக்க முடியாத இரும்பு.
- எதிர்பார்ப்பு எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, ஏமாற்றமும் அவ்வளவு குறைவாக இருக்கும்.
- ஆனைக்கு ஒரு காலம். பூனைக்கு ஒரு காலம்.
- ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
- ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
- ஆறாவது பெண்ணானால் ஆறானது நீறாகி விடும்.
- ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி; ஆறு கடந்தால் நீ யார்? நான் யார்?
- ஆறு போவதே போக்கு; அரசன் சொல்வதே தீர்ப்பு.
- ஆறுகெட நாணல் இடு; ஊரு கெட நூலை விடு.
- ஆறுமில்லாப் பொண்ணுக்கு அண்டை வீட்டுக்காரன் அத்தை மகனாம்.
- ஆற்ற ஆள் இல்லை; தேற்ற யாரும் இல்லை.
- ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.
- ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
- ஆறு நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்.
- ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
- ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை.
- ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
- ஆழம் தெரியாமல் காலை விடாதே.
- ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலன் தரும்.
- ஆந்தைக்குத் தன் குஞ்சு ராஜாளிதான்.
- இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
- இட்ட உறவு எட்டு நாளைக்கு; நக்கின உறவு நாலு நாளைக்கு.
- இடிவிழுந்தபின் பஞ்சாங்கம் பார்த்து என்ன பண்ண?
- இனம் இனத்தோடே: வெள்ளாடு தன்னோடே.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- இன்று செய்யவேண்டியதை, நாளை என்று தள்ளிப்போடாதே!
- கோபம் அறிவீனத்தில் தொடங்கித் துக்கத்தில் முடிகின்றது.
- வந்த வழியை மறவாதிருந்தால் எந்த பதவியும் பறிபோகாதாம்.
- வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.
- பட்டம் பதவிக்கு பறக்காதே, அவை தாமே பறந்து வந்து உன் மடியில் விழ வேண்டும்.
- நல்ல சிந்தனைகள், நல்ல செயல்களாகப் பரிணமிக்கின்றன.
- பகுதிநேர வேலைகூட, முழுநேர வேலைக்கான படிக்கட்டாக அமையும்.
- உண்மை உள்ளத்தூய்மையை உண்டாக்கும், உள்ளத்தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி.
- உன் சொற்கள் எப்படியிருக்கிறதோ அந்தளவுக்கு நீ மதிக்கப்படுவாய்.
- பக்தி என்பது தனிச்சொத்து, கடவுள் என்பது பொதுச்சொத்து.
- பகைவனை அடக்குபவனைவிட ஆசைகளை அடக்குபவனே மாவீரன்.
- நீ ஏமாற்றியாக இருந்தால், உன்னை ஏமாளியாக்குவதற்கும் ஒருவனை இறைவன் படைப்பான்.
- உண்மையான பெரிய மனிதருக்கு முதல் அடையாளம் பணிவாக இருத்தல்.
- கடல் போல் செலவழி, ஆனால் எள் முனையளவேணும் வீணாக்காதே.
- பிறர்க்கு உதவி செய்ய எப்போதும் தயாராக இருங்கள்.
- நல்ல நண்பனைத் தேடிக்கொள்ளாதவன், தனக்குத் தானே பகைவன்.
- தொடங்குவதை நன்றாக தொடங்கினால், அதுவே பாதி வெற்றியாகும்.
- எதிர்காலத்தை திட்டமிடுங்கள், ஏனெனில் அதுதான் உங்கள் வாழ்க்கையில் மீதமுள்ள காலம்.
- உன் பொறாமையால் மற்றையவர்கள் தாழ்வதில்லை, நீ தான் தாழ்வாய்.
- ஒரே எண்ணம் உடையவர்கள் சேர்ந்தால், கடலையும் வற்றவைக்க முடியும்.
- மற்றையவர் கெஞ்சும் போது நீங்கள் மிஞ்சினால் அவர்கள் மிஞ்சும் போது நீங்கள் கெஞ்ச நேரிடும்.
- இடைவிடாத முயற்சியும் எப்போதும் மலர்ந்த முகமும் அறிவின் அறிகுறிகள்.
- ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான், அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்.
- தான் விரும்புவதை எல்லாம் செய்பவன் வல்லவன், தான் செய்வதை விரும்புபவன் அறிவாளி.
- அன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போடுகின்றாயோ அதற்கேற்ப நலம் பெறுவாய்.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- மறுமணம் என்பது வாழ்க்கையை இழந்தவருக்கே, வாழ்க்கையைத் துறந்தவருக்கல்ல.
- நொந்தவன் வாழ்க்கையைப் படிப்பினையாக எடுத்துக் கொள். உயர்ந்தவன் வாழ்க்கையைக் குறிக்கோளாக எடுத்துக் கொள்.
- வார்த்தைகளில் கனிவு வாழ்க்கைக்கு இனிமை.
- அழகோடு ஆணவம் கூடி நின்றால், அந்த ஆணவமே அழகை அழித்துவிடும்.
- அறிஞனுக்கு ரோஜாவின் அழகும் மணமும் தெரியும், முட்டாளுக்கு முள் மட்டுமே தெரியும்.
- மனைவிக்கு உலகமாய் இரு, ஆனால் மனைவிதான் உலகம் என்று இருந்துவிடாதே.
- நெருங்கி இருந்த நண்பன் விலகிப் போனாலும் ஆபத்து, விலகி இருந்த எதிரி நெருங்கி வந்தாலும் ஆபத்து.
- விளக்கு எரிந்தால் அதன் எண்ணெய் குறையும், உன் மனம் எரிந்தால் உன் எண்ணம் தேயும்.
- காதலைச் சொல்ல ஒரு நொடி போதும்: ஆனால், அதை நிரூபிக்க ஒரு வாழ்க்கை வேணும்.
- பணிந்து வாழ்ந்தால் உயர்ந்து போவாய்: நிமிர்ந்து திரிந்தால் இறங்கி வருவாய்.
- கடன் கொடுத்தவனுக்குக் கோபம் கூடாது, கடன் வாங்கியவனுக்கு ரோசம் கூடாது.
- நெஞ்சில் வஞ்சம் கொஞ்சமும் இன்றி மனைவியை நேசித்துப் பார், உன் தெய்வம் பூஜையறையில் இல்லை, படுக்கையறையில்.
- இளமையும் அன்பும் வசந்த காலப் பரிசு, அவற்றை நீயே எடுத்து அனுபவித்துக் கொள்.
- பெண் சுதந்திரம் என்பது ஆண்களை அடிமையாக்குவதல்ல.
- அற்ப சலுகைகளுக்காக மதம் மாறுபவன் சொற்ப சலுகைகளுக்காக மனைவியை மாற்ற மாட்டானா?
- மனிதரை மனிதர் சமமாய் மதிப்பது கடமை.
- குற்றத்தை ஒப்புக் கொண்டாலே பாதி மன்னிப்புக் கிடைத்துவிடும்.
- மனைவியும் கம்ப்யூட்டரும் ஒன்று: புரிந்துகொண்டால் சொர்க்கம், இல்லையென்றால் நரகம்.
- பிரமண் படைப்பில் அழகும் இருக்கும் அகோரமும் இருக்கும்: ஆனால் உணர்ச்சிகள் ஒரே மாதிரியானவை.
- சீதனம் வாங்கிச் செய்யும் திருமணம் காதலின் அருமை காணா வெறுமணம்.
- சொல்லிய வார்த்தைக்கு நீ அடிமை சொல்லாத வார்த்தை உனக்கு அடிமை.
- புன்னகையில் ஆரம்பி, சிரிப்பில் நிறைவேற்று.
- தாலியும் மழலையும் அடிமை விலங்கென கொள்ளும் மாதரே, உம் மடமைதனைக் கொளுத்துவீர்.
- முயன்று தோற்பது கௌரவம் முயலாமல் இயலாது என்பது கேவலம்.
- உன் எரிச்சல் உன்னை எரிக்குமே தவிர பிறரை எரிக்காது.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- கீழ்ப்படிதல் மட்டுமே, கட்டளையிடுவதற்கான உரிமையை அளிக்கிறது.
- ஆற்றல் உடையவனாய் இருப்பதை விட, நேர்மை உடையவனாய் இருப்பது மேல்.
- வெற்றியின் வேர்களை முயற்சி என்னும் மண் தான் பலப்படுத்தும்; மற்றவை பாழ்படுத்தும்.
- குழந்தைகளுக்கு கீழ்படிதல் முதல் பாடமாக இருக்கட்டும். இரண்டாவது பாடத்தை உன் இஷ்டப்படி கற்றுக் கொடு.
- நீ கோபம் கொள்ளும் ஒவ்வொரு நிமிடமும் அறுபது விநாடி மகிழ்ச்சியை இழக்கிறாய்.
- தன் துன்பத்தில் இன்பத்தைத் தேடுபவன் மனிதன் அடுத்தவர் துன்பத்தில் இன்பப்படுபவன் மிருகம்.
- துயரம் ஒரு மணி நேரத்தை, பத்து மணி நேரமாக்குகிறது.
- எதையும் புரிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் மனதை அமைதிப் படுத்த வேண்டும்.
- ஒவ்வொரு புதிய செயலின் போதும் உங்கள் பழைய எண்ணத்தைப் பயன்படுத்துங்கள்.
- தைரியமுள்ளவன் அன்பையும், அதிர்ஷ்டத்தையும் நண்பனாக்கிக் கொள்கிறான்.
- அதிர்ஷ்டத்தினை நம்பி உழைப்பினை மறப்பது முட்டாள் தனம்.
- வென்றவன் அனைத்திலும் புத்திசாலியல்ல தோற்றவன் அனைத்திலும் முட்டாளல்ல.
- கோபமாக இருக்கும் போது, கடிதத்திற்க்குக் பதில் எழுதாதே.
- இனிமையாக பேசினால் இதயங்களை ஈர்க்கலாம் எளிமையாக வாழ்ந்தால் பேராசைகளை நீக்கிடலாம்.
- உண்மையான நட்பிற்கு முன்னால் கோபம், வெறுப்பு, பகை இவையெல்லாம் ஒன்றுமேயில்லை.
- இரவு வந்து விட்டால், ஒரு நாத்தீகன் கூட கடவுளைப் பாதி நம்புகிறான்.
- உழைப்பில்லாமல் எதையும் பெற முடியாது என்பது இயற்கை வகுத்த சட்டமாகும்.
- கடமையை செய்வதுதான் உனது பணி. அதன் பலன்கள் மீது உனக்கு அதிகாரமில்லை.
- தனது தாய்நாட்டை நேசிக்காதவன் எதையுமே நேசிக்க முடியாது.
- பாவம் செய்கின்ற மனிதனுடைய செயல்களே அவனை அழிவுக்கு கொண்டு போகின்றன.
- சுதந்திரம் தருபவர் முன் அடங்கி இரு; அடக்குபவர் முன் சுதந்திரமாய் இரு.
- நாட்டுக்காக ஒருவர் உயிர்த்தியாகம் செய்வது நல்லது. அது பெருமை மிக்கது.
- பிச்சை எடுப்பதைக் காட்டிலும், அதிகம் சிறந்தது அல்ல கடன் வாங்குதல்.
- மாட்டுப்பொங்கல் தினத்தன்று மாட்டுக்குக் பொங்கலிடாவிடினும் மாட்டை பொங்கலிடாதீர்கள்.
- உனது வலது கை செய்வதை, இடது கை அறியாமலிருப்பதே தர்மம்.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- புறம் பேசும் உறவுக்காரனை விட, போட்டி போடும் அயலானே நல்லவன்.
- பிறருடைய தவறுகளை நீ மன்னித்தால் தான் உன்னுடைய தவறுகள் மன்னிக்கப்படும்.
- உள்ளார்க்கு செல்வங்கள் சொந்தம், அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்.
- முதுமையை அலட்சியம் செய்யாதே. அது உன்னையும் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
- கடனாகக் கொடுப்பதை விட இனாமாகக் கொடுப்பது நல்லது.
- சொல்லானது அம்பு போல, ஒரு முறை எய்து விட்டால் திரும்பப் பெற முடியாது.
- இறைவனிடம் மனம் ஈடுபடுவதைப் பொறுத்து விதியின் கொடுமை குறையும்.
- முயன்று தோற்பது கௌரவம் முயலாமல் இயலாது என்பது கேவலம்.
- ஒவ்வொரு சோதனையும் நமக்கு பயனான படிப்பினை ஒன்றை போதிக்கிறது.
- நினைத்த காரியத்தை இடையில் ஏற்படும் தோல்விக்காக கை விட்டு விடாதே.
- உண்மையான பெரிய மனிதனுக்கு முதல் அடையாளம் பணிவாக இருத்தல்.
- எளிய மனிதர்களுக்கு உதவுவதின் மூலமே, பெரிய மனிதர்களின் பெருந்தன்மை வெளிப்படும்.
- ஒரு வினாடியில் நாம் செய்யும் தவறு வாழ்நாள் முழுவதும் வேதனை தரும்.
- உனக்கு தெரிந்தவற்றை மட்டும் நீ செய் தெரியாததில் தலையிடாதே.
- பணத்தை சேர்ப்பது பெரிய சாதனை, அதை விட பெரிய சாதனை அதைக் காப்பது.
- நன்மைகளைப் பேசத் தெரியாவிட்டாலும் தீமைகளை ஏசத் தெரிய வேண்டும்.
- மகிழ்ச்சிகரமான எதிர்காலத்தை நம்பாதே உயிருள்ள நிகழ்காலத்தில் செயல்படு.
- மருத்துவத்தை விட, திட்டமிட்ட உணவு முறை அதிக நலனை உண்டாக்கும்.
- துன்பங்களைக் கண்டு துவளாதே, கயவர்களை கண்டு கலங்காதே, வெற்றியைக் கண்டு வியப்படையாதே.
- எது அழகாக இருக்கிறதோ அது மரிப்பதே இல்லை மற்ற அழகுகளினுள் கலந்து விடுகிறது.
- பிள்ளைக்கு கல்வி கற்க ஏற்பாடு செய்யாதவன் ஒரு திருடனை உருவாக்குகிறான்.
- எல்லாம் தெரிந்ததாக நடிப்பவனைக் காட்டிலும் எதையும் தெரிந்து கொள்ளத் துடிப்பவர் சிறந்தவர்.
- தூங்கினேன், வாழ்வே அழகு என்று கனவு கண்டேன். விழித்தெழுந்தேன், வாழ்வே கடமை என்று உணர்ந்தேன்.
- படித்த இளைஞனுக்கு வேலை தராத சமுதாயம் ஒரு தீவிரவாதியை உருவாக்குகிறது.
- வெற்றியில் கற்றுக் கொள்வதை விட தோல்வியில் தான் அதிகமாக கற்றுக் கொள்கிறோம்.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- தவறு சிறியதாய் இருக்கும் போதே திருத்திக் கொள்.
- எதிரி யானை போல இருந்தாலும், நீ அவனை எறும்பு போல கருது.
- நம்முடைய பொருளாதார நிலவரத்துக்கு ஏற்றபடிதான் வாழ வேண்டும்.
- பெருமையோடு இல்லாமல் பொறுமையோடு இருப்பவளே பெண்.
- மனிதர்களின் செய்கைகள் நடவடிக்கைகள் ஒரு புத்தகத்தின் முன்னுரையை போன்றது.
- இளமையில் வேலைக்காரனாக இருந்தால் முதுமையில் எஜமானாக இருக்கலாம்.
- நம்பிக்கையும், பிரார்த்தனையும் இல்லாத தொழில் வெற்றி பெறாது.
- பணத்தை இழந்தால் சொற்ப நஷ்டம், நேரத்தை இழந்தால் எல்லாமே நஷ்டம்.
- அன்பாயிரு அடிமையாயிராதே ஏழையாயிரு கோழையாயிராதே.
- உழைப்பே ஓய்வுக்குத் திறவுகோல் சுறுசுறுப்பே செல்வத்திற்க்குத் திறவுகோல்.
- உள்ளத்தோடு போராடுவதே உண்மையான போராட்டம் அதுவே உண்மையான வெற்றியும் கூட.
- அண்டை வீட்டுக்காரனிடம் அன்பு கொள் ஆனால் வேலியை மட்டும் விலக்கி விடாதே.
- நம்மை விடச் சிலர் தாழ்ந்தவர் என்று கருதுவது தவறு மட்டுமல்ல, பாவமும் ஆகும்.
- உனக்கு என்ன தீங்கு நேரிட்டாலும், அது உன் கைகளால் செய்த செயலின் விளைவுகளே.
- உன்னிடத்தில் இல்லா விட்டால் பட்டினியாயிரு அடுத்தவனிடத்தில் கை ஏந்தாதே.
- மனிதனுடைய சுபாவங்கள் வெளிப்படுவது பிரச்சனையில் மாத்திரமே.
- வாழ்க்கை பயணத்தில் நம்முடன் பயணிப்பவர்கள் இன்பம், துன்பம் என்னும் இருவர்.
- உன் பொறாமையால் மற்றவர்கள் தாழ்வதில்லை நீதான் தாழ்வடைகிறாய்.
- நீ பெரியவனாக உயரும் போது, மற்றவனை சிறியவனாக நினைத்தால் நீயும் சிறியவன்தான்.
- அவசியமில்லாததை வாங்கினால் விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.
- பிறர் பாரத்தைத் தாங்கக் கை கொடுத்தால் நம்முடைய பாரம் தானாகவே குறையும்.
- இன்று நல்லதையே பேசி, நல்லதையே எழுது நாளைய சந்ததி உன்னை பின்பற்றும்.
- ஊக்கம் கடனை அடைக்கும். ஏக்கம் அதனை அதிகமாக்கும்.
- ஆசை பேராசையானாலும் அன்பு வெறியானாலும் அமைதி தூர விலகி விடும்.
- பாராட்டுவதற்குக் கை குலுக்கியவரை மறந்தாலும் அதை பெருவதற்க்கு கை கொடுத்தவரை மறவாதே.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- உழைப்பால் பிழைப்பைத் தேடிக்கொண்டு, பிறரிடம் கை நீட்டாதவன் கடவுளுக்கு மிகவும் பிரியமானவன்.
- உள்ளத்தில் அன்பு இருந்தால் மட்டும் போதாது அது செயலில் வெளிப்பட வேண்டும்.
- கோயிலுக்கு தங்கத்தை அளிப்பதை விட ஒரு ஏழையின் வாழ்க்கைக்கு உதவுவது மேலானது.
- வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும்.
- முடிவெடுக்கும் ஆற்றல் உன்னிடம் வளர வளர நீ தேர்ந்தெடுப்பதில் குழப்பம் மறையும்.
- தனது பசியை அடக்கிக் கொண்டவன், மனித சுபாவத்தையே வெற்றி கொண்டவன்.
- உழைப்பே உயர்வுக்குத் திறவுகோல் சுறுசுறுப்பே செல்வத்திற்க்குத் திறவுகோல்.
- மனதை நீ இயக்கினால் ஆற்றல், அது தானாக இயங்கினால் ஆபத்து.
- பண்பாடு குன்றிய இடத்தில்தான் பகைமை உணர்ச்சி அதிகம் காணப்படும்.
- நெருக்கமாய் இரு, ஆனால் கீழ்த்தரமாய் ஒருபோதும் இராதே.
- மன்னிக்கும் குணம் மனிதனுக்கு உயர்வானது அது தர்மத்தை விட பலமடங்கு உயர்வு.
- நாணயமாக நடப்பவர்கள் ஒளிக்கும் இருளுக்கும் அஞ்சுவதில்லை.
- சாட்சிக்காரன் காலில் விழுவதை விட, சண்டைக்காரன் காலில் விழுந்து விடலாம்.
- தகுதிக்கு தக்கவாறு வாழாதவன் வாழ்க்கை தீராத கவலையில் முடியும்.
- மனிதனின் இதயத்தைத் திறப்பது அவனை அறியாமல் எழும் சிரிப்புதான்.
- அடக்கமுள்ள மனிதன் தன்னைப் பற்றி பேசிக் கொண்டு திரியமாட்டான்.
- உடலுக்கு உழைப்பு போன்று உள்ளத்துக்குத் துன்பங்கள் பலத்தைத் தரும்.
- ஞானிகள் விலகியிருப்பது உலகத்தை வெறுக்க அல்ல, அதனை அறியவேதான்.
- கடுமையான உழைப்பைத் தவிர வெற்றிக்கு வேறு வழியில்லை.
- செல்வம் என்பது வருமானத்தைப் பொருத்தல்ல நிர்வாகத் திறமையை பொருத்தது.
- கண்டிக்கத் தெரியாதவனுக்குக் கருணை காட்டவும் தெரியாது.
- இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறாயோ அதைப்பற்றி மட்டுமே நினைக்க வேண்டும்.
- நாளைய தினத்தைக் குறித்து கவலைப்படாதே ஒருநாளும் பிறப்பிப்பதை நீ அறியாயே.
- மலையளவு சொல்லை விட கடுகளவு செயல் மிகச்சிறந்தது.
- காலத்தின் மதிப்பை நீ அறிந்திருந்தால் வாழ்வின் மதிப்பையும் அறிந்திருப்பாய்.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- தலைவிரி கோலத்தில் கோவிலுக்குப் போனால் கைவிரி கோலம்தான் கைமேல் பலன்.
- கேள்வி கேட்பவனை விட பதிலளிப்பவன் புத்திசாலி. கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லக்கூடியவன் அதிபுத்திசாலி.
- எல்லாம் வேடிக்கைதான், நமக்கு நடக்காமல் மற்றவர்களுக்கு நாடாகும் வரை.
- தொலைவில் உள்ள உடன்பிறப்பை விட, அருகில் உள்ள அண்டை வீட்டுக்காரன் மேல்.
- இடைவிடாத முயற்சியும் எப்போதும் மலர்ந்த முகமும் அறிவின் அறிகுறிகள்.
- எவன் தனக்குத் தானே அதிபதியாய் உள்ளானோ அவனே சிறந்த மனிதன்.
- ஆசை முடியும் கட்டத்தில்தான் அமைதி பிறக்கிறது.
- ஆசை பேராசையானாலும், அன்பு வெறியானாலும் அமைதி தூர விலகி ஓடும்.
- எவரால் மனித இனத்துக்கு நன்மை ஏற்படுகிறதோ அவரே மனிதரில் சிறந்தவர்.
- கட்சிக் கொடிகளின் நிரலில்தான் நாட்டுப் பற்று புதைக்கபடுகிறது.
- ஒன்றுமில்லாதவன் ஏழை அல்ல அளவுக்கு அதிகமாக ஆசைபடுபவனே ஏழை.
- உலகைத் திருத்த விரும்பினால், முதலில் உன்னைத் திருத்திக் கொள்.
- ஒழுக்கம் இல்லா அழகு, மணம் இல்லா மலராகும்.
- சோம்பனுக்கு இன்று ஒருநாள் கொடுத்தால், அது அடுத்த நாளையும் திருடிக் கொள்ளும்.
- விரோதி உன் குறைகளைப் பிறரிடம் சொல்வான். நண்பன் உன் குறைகளை உன்னிடமே சொல்வான்.
- அழகு அழிந்த போதும், ஒழுக்கம் நிலைக்கும்.
- வேலை செய்வதில் அவசரம் கூடாது இடையில் இளைப்பாறுதல் கூடாது.
- ஒரே எண்ணம் உடையவர்கள் சேர்ந்தால் கடலையும் வற்ற வைக்க முடியும்.
- அறத்துடனும், அமைதியுடனும் இருந்தால் அவனியை வென்று விடலாம்.
- மாபெரும் தியாகங்கள் மூலமாக மட்டுமே சாதனைகளைச் சாதிக்க முடியும்.
- எழும் போது தாங்க வருகின்றவரெல்லாம் விழும் போது தூக்க வருவதில்லை.
- சாக்குக் கூறும் ஆற்றல் பெற்றவன் சாதனை செய்வதற்குத் தகுதியற்றவன்.
- பணிவு என்பது தாழ்மையின் சின்னமல்ல உயர்ந்த பண்பின் அறிகுறி.
- சிக்கனமும், சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் சிறந்த கருவிகள்.
- நண்பனுக்கு நல்லது செய், நட்பு நிலைக்க பகைவனுக்கும் நல்லது செய், அவனை நண்பனாக்க.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- பத்து ஆனாலும் பதற்றம் வேண்டாம், அஞ்சு ஆனாலும் அவசரம் வேண்டாம்.
- கடந்த காலத்தை எண்ணாமல் நிகழ்காலத்தை சிந்தனை செய்தலே நல்லது,
- சித்திரை பின் ஏழு, வைகாசி முன் ஏழு சிக்கலான அக்னி நட்சத்திரம்.
- பணக்காரனும் தூங்கமாட்டான்; பைத்தியக்காரனும் தூங்கமாட்டான்.
- வேலைக்காரனாய் இருந்து பழகினால்தான் நீ எஜமான் ஆக தகுதி பெறுவாய்.
- பாத்திரம் அறிந்து பிச்சை போடு. கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு.
- பலம் பொருந்திய நூறு கைகளை விட ஒரு நல்ல மூளையே சிறந்தது.
- மனிதர்கள் மழை தடுக்கி விழுவதில்லை. சின்ன சின்ன கற்கள் தடுக்கியே விழுகின்றனர்.
- ஆண் பிள்ளையை அடக்கி வளர்க்க வேண்டும்; பெண் பிள்ளையை போற்றி வளர்க்க வேண்டும்.
- செக்கு உலக்கையை விழுங்கினவனுக்கு சுக்கு கஷாயம் மருந்தாகுமா?
- மனிதனுக்கு அழகு அவனுடைய நாக்கு இனிய சொற்களை மட்டும் பேசுவது.
- ஒரே ஒரு கோழை, பத்து தைரியசாலிகளையும் கோழையாக்கி விடுவான்.
- தலைக்கு மேல் ஓடிய வெள்ளம் சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன?
- மனிதனுக்கு மரியாதை அவசியம், மலருக்கு நறுமணம் சொந்தம்.
- ஈ க்கு விஷம் தலையில், தேளுக்கு விஷம் கொடுக்கில்.
- தன்னை தானே வெல்பவன், உலகின் தலை சிறந்த வீரனாவான்.
- மனத் தூய்மையே நேர்மை, மற்றவை எல்லாம் வெறும் கூச்சல்.
- உடையவன் பொறுத்தாலும், உடையவன் வீடு நாய் பொறுக்காது.
- மகிழ்ச்சியோடு சுமந்தால் எத்தகைய பாரமும் இலகுவாயிருக்கும்.
- அறிவுக்குத் தன் வாழ்வை காணிக்கை ஆக்குகிறவன் என்றும் இறப்பதில்லை.
- மகத்தான சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையினால் அல்ல, விடாமுயற்சியினால்.
- கடைமையும், இந்த நாளுமே நம்முடையது. பயன்களும், எதிர்காலமும் கடவுளுடையது.
- உழைப்பின்றி உயர்வதாகப் பெருமைப்படாதே, உண்மையான பெருமை உழைப்பில்தான் வருகிறது.
- மனைவி உனக்காக எதையும் இழப்பாள். எதற்காகவும் உன்னை இழக்கமாட்டாள்.
- அன்பு ஒரு முதலிடு, எவ்வளவு போடுகின்றாயோ அதற்கேற்ப நயம் பெறுவாய்.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.
- இமையின் குத்தம் கண்ணுக்குத் தெரியாது.
- இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
- இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
- இரவல் வாங்கிய உடை வாடை தாங்காது.
- இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை; இராச திசையில் கெட்டவனும் இல்லை.
- இராசா மகளானாலும் கொண்டவனுக்கு பெண்டுதான்.
- இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப் போல் சேவகனும் இருப்பான்.
- இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இருக்குமா?
- இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை?
- இறுகினால் களி, இளகினால் கூழ்.
- இறைத்த கிணறு ஊறும்; இறையாத கேணி நாறும்.
- இலை அறுத்தவன் குலை அறுக்கமாட்டானா?
- இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
- இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
- இளங்கன்று பயமறியாது. இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
- இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
- இளமையில் முயற்சி முதுமையில் காக்கும்.
- இளைத்தவன் பெஞ்சாதி எல்லாருக்கும் மச்சினி.
- ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
- ஈட்டி எட்டு முழம் பாயும்; பணம் பாதாளம் மட்டும் பாயும்.
- ஈட்டுக்கும் பாட்டுக்கும் இருந்தால் எடுகுமரி.
- ஈயத்தைக் காச்சிக் காதில் ஊத்தினாப் போல.
- ஈர நாவிற்கு எலும்பில்லை.
- உடம்பு போனால் போகிறது; கை வந்தால் போதும்.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- நீ பார்ப்பதிலே பாதியை நம்பு; கேட்பதிலே எதையும் நம்பாதே.
- தவறு செய்தால் ஏற்படும் மன உலைச்சலைவிட அதற்கு மன்னிப்புக் கேட்பதால் ஏற்படும் மன நிறைவு உயர்வானது.
- துன்பத்தைக் கண்டு பரிதாபப்படுபவன் மனிதன். அந்த துன்பத்தை நீக்குபவன் இறைவன்.
- நெருப்பு பொறிகள் மேலே பறப்பதைப் போல, மனிதன் கஷ்டப்படவே பிறந்திருக்கிறான்.
- எல்லா உறவுகளுக்கும் உயிரை நேசிக்கத் தெரியும்; காதலுக்கு மட்டுமே உயிரை சுவாசிக்கத்தெரியும்.
- ஏழைக்கு இரங்குகிறவன் கடவுளுக்கு கடன் கொடுக்கிறான். அவர் அதை அவனுக்குத் திரும்பப் கொடுப்பார்.
- ஒற்றுமை எங்கிருக்கிறதோ, அங்கேதான் வெற்றியும் எப்போதும் இருக்கிறது.
- வறுமை என்பது அவமானமானதல்ல; அது நன்மை உருவாக்கக்கூடியப் பாடங்கள்.
- வாயும், கையும் சுத்தமாக இருந்தால் உலகம் முழுவதும் செல்லலாம்.
- தாலி என்பது வங்கியில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டியதல்ல. தினமும் நெஞ்சத் தொட்டு பூசிக்கப்பட வேண்டியது.
- துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; கடவுளின் ராஜ்யம் அவர்களுடையதே.
- இறைவன் யாரை நேசிக்கிறாரோ, அவரைத் தண்டிக்கிறார்.
- ஏழையாகவும் இருந்து, சுதந்திரமாகவும் இருப்பது என்பது முடியாத காரியம்.
- தாய்த்தமிழை மறைத்தவன் பெற்று எடுத்த பிள்ளைக்கு முறையான தந்தை ஆகமாட்டான்.
- மனிதா, நீ வணங்கும்படி சில விலங்குகள் நடக்கின்றன: ஆனால், விலங்குகள் வணங்கும்படி நீ நடந்ததுண்டா?
- உனது லட்சியத்தை அடையும் வரை போராடு; உதவி கேட்டும் பெறாதவர்களுக்கே, உதவி செய்.
- அர்த்தமற்ற, கண்டறியாத புதுப் பெயர்களைவிட, பழைய அழகுதமிழ் பெயர்களே மேல்.
- உண்மையைப் பேசி உத்தமனாக வாழ்!
- முட்டாள் கூட மௌனமாக இருக்கும் போது அறிவாளி என மதிக்கப்படுகிறான்.
- பெண் சுதந்திரம் என்பது கட்டறுத்து ஓடும் காளையல்ல கட்டுக்குள் இல்லாமல் பட்டிக்குள் நிற்கும் பசு.
- அன்பு செலுத்துபவனை அடக்கி ஆள முடியாது; அடக்கி ஆள்பவனையும் அன்பினால் வெல்லலாம்.
- உள்ளங்கள் பொங்க, உணர்வுகள் பொங்க, மகிழ்ச்சி பொங்கும்.
- அன்று செய்தால் என்றோ என்பது அந்தக்காலம்: இன்று செய்தால் இன்றே என்பது இந்தக்காலம்.
- தவறுகள் செய்யும் போது மனச்சாட்சி தெரிவதில்லை: தவறுகள் தெரியும் போது மனச்சாட்சி விடுவதில்லை.
- ஏமாற்றுவது கெட்டித்தனமல்ல, பெறும் நம்பிக்கைத்துரோகம்.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- எதையும் செய்த பிறகு அழுவதை விட அதை செய்யாமல் இருப்பதே நலம்.
- ஏழைக்கு செய்யும் தொண்டு ஆண்டவனுக்கு செய்யும் தொண்டு.
- காரியங்களை கடினமாக்குவது சோம்பல் சுலபமாக்குவது உழைப்பு.
- சிறு சேமிப்பு வீட்டை காக்கும் சிக்கனம் நாட்டை காக்கும்.
- அதிகம் பேசினால் அமைதியை இழப்பாய் ஆணவப்பேச்சினால் அன்பை இழப்பாய்.
- சிறந்த பண்பாக கருதப்படுவது பிறர்க்கு கொடுத்து வாழ்வது.
- நடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும் நடப்பவை நல்லதாக இருக்கட்டும்.
- வேகமாக பேசினால் அர்த்தத்தை இழப்பாய் கோபமாக பேசினால் குணத்தை இழப்பாய்.
- வறுமையை நினைத்து பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே.
- உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக.
- வறுமையை காட்டி சிறுது தூரம் அந்த பாதையில் நம்மோடு நடப்பவனே நண்பன்.
- செல்லப் பிள்ளையாக வளர்ப்பதை விட நல்ல பிள்ளையாக வளர்க்க வேண்டும்.
- யுத்த களத்தில் இரக்கம் காட்டுவது செத்த வீட்டில் சிரித்து மகிழ்வது போல.
- திக்கற்றவர்க்கு தெய்வமே துணை.
- நம்முடைய நட்பு யாரோடு இருக்கிறதோ அதற்கேற்பதான் நம் நிலை இருக்கும்.
- மனிதன் இயற்கையில் நல்லவன்தான் சூழ்நிலை அவனை கெட்டவனாக்குகிறது.
- உழைக்கும் கரங்களே உருவாக்கும் கரங்கள்.
- கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்.
- அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாவான்.
- பொறுப்புள்ள பெற்றோர்க்கு குடும்பம் சுவையாய் இருக்கும்.
- ஆபத்து வரும் போது நண்பனையும். வறுமை வரும் போது மனைவியையும் பார்க்க வேண்டும்.
- வரவுக்கு மேலே செலவு செய்தால் அவனும் குருடனும் ஒன்றாவான்.
- அறத்தைக் காப்பதும் சொன்ன சொல்லைக் காப்பதும் மேன்மையிலும் மேன்மையாகும்.
- ஒன்றுபட்டு வாழ்வோம் பாசத்துடன் சேர்ந்தே வாழ்வோம் தேசத்துடன்.
- களவுக்கு போகும் பொருளை எடுத்து வறுமைக்கு தந்தால் நலமாகும்.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
- எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் புத்திசாலியின் பார்வை இலக்கை நோக்கியே இருக்கும்.
- கல்வியின் வேர் கசப்பானது: ஆனால் அது இன்பமான பழக்கத்தைத் தருகின்றது.
- கோணல் இல்லாத தென்னை மரத்தையும், விவாதத்தில் சளைக்கும் பெண்ணையும் காண்பது அறிவு.
- எவர் துன்பத்தையும் தெரிந்து கொள், ஆனால் உன் துன்பத்தைக் கூறி விடாதே.
- கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது போல.
- கோமளவல்லிக்கு ஒரு மொழி கோளாறுக்காரிக்கு பல மொழி.
- எதுவும் தெரியாதவனுக்கு எதற்கெடுத்தாலும் சந்தேகம்தான்.
- கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான், மரம் ஏறி கைவிட்டவனும் கெட்டான்.
- சமையலறை முதலில் வீட்டை விழுங்கி முடிவில் தன்னையும் விழுங்கி விடும்.
- எறும்பின் கண் அதன் அளவிற்குப் பெரியது. யானையின் கண் அதன் அளவிற்குச் சிறியது.
- கடுக்காய்க்கு மிஞ்சிய மருந்துமில்லை, கண்ணனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
- சங்கிலே வார்த்தால் தீர்த்தம். செம்பிலே வார்த்தால் தண்ணீர்.
- ஏழைக்கு ஒரு போதும் வாக்கு கொடுக்காதே பணக்காரனுக்கு ஒரு போதும் கடன்படாதே.
- சகோதரனைப் போன்ற நண்பனில்லை. சகோதரனைப் போன்ற எதிரியில்லை.
- கார்த்திகைக்குப் பின் மழை இல்லை; கர்ணனுக்குப் பின் கொடை இல்லை.
- சமுத்திர அலை ஓயப்போவதில்லை. தம்பி தலை முழுகித் தர்ப்பணம் பண்ணப் போவதுமில்லை.
- துளசிக்கு வாசமும், முள்ளுக்குக் கூர்மையும் முளைக்கிறபோதே தெரியும்.
- நண்பர்களைப் பற்றி நிறைய பேசுங்கள்; வேண்டாதவர்களைப் பற்றி ஒன்றும் பேசாதீர்கள்.
- சாட்டை அடியும், சவுக்கு அடியும் பொறுக்கலாம், மூட்டை பூச்சுக்கடியும், முணுமுணுப்பும் ஆகாது.
- நம்பிக்கை குதிரைகள் விரைந்து செல்லும், அனுபவக் குதிரைகள் மெதுவாகத்தான் செல்லும்.
- தீங்கு செய்யாதிருத்தலே நன்மைகளில் எல்லாம் முதன்மையானதாகும்.
- சிறு குழந்தை இல்லாத வீடும் வீடு அல்ல, சீரகம் இட்டு ஆக்காத கறியும் கறி அல்ல.
- பனை மரத்தின் கீழே இருந்து பால் குடித்தாலும் கள் குடித்ததாகத்தான் சொல்வார்கள்.
- நமது செல்வம் நம்மை அதிகாரம் செய்யத் தொடங்கினால் நாம் ஏழைகளே.
- சித்திரை மாதத்தில் சிறந்து உழுத புழுதியிலே கத்தரி நடாமல் கரும்பு நட்டு வீனானேன்.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )