- கண்ணாலே கண்டாலும் மண்ணாலே மறை.
 - கண்ணிற் பட்டால் கரிக்குமா? புருவத்திற் பட்டால் கரிக்குமா?
 - கண்ணிலே குத்தின விரலை வெட்டியா விடமுடியும்?
 - கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
 - கனிந்த பழம் தானே விழும்.
 - கன்று கூடி களமடிக்க வைக்கோளுமாகாது; செத்தையும் ஆகாது.
 - கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
 - கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை விற்றா விடியும்.
 - கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்.
 - கரணம் தப்பினால் மரணம்.
 - கரிவிற்ற பணம் கருப்பாய் இருக்குமா?
 - கரும்பு கசிக்கிறது வாய்க் குற்றம்.
 
- கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
 - கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாமா?
 - கறையான் புற்று பாம்புக்கு வீடு.
 - கற்கையில் கல்வி கசப்பு; கற்றபின் அதுவே இனிப்பு.
 - கற்பில்லா அழகு; வாசமில்லாப் பூ.
 - கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
 - கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
 - உலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
 - கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
 - கல்லடிச் சித்தன் போன வழி; காடுமேடெல்லாம் தவிடுபொடி.
 - கல்லாடம் (நூல்) படித்தவனோடு மல் ஆடாதே.
 - கல்லாதவரே கண்ணில்லாதவர்.
 - கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
 - ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
 
No comments:
Post a Comment