- கடல் திடலாகும்; திடல் கடலாகும்.
 - கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
 - கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
 - கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
 - கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
 - கடுகு களவும் களவு தான்; கற்பூரம் களவும் களவுதான்.
 - கடுகு போனதைத் தேடுவார்; மலை போறது தெரியாது.
 - கடுங்காற்று மழை கூட்டும்; கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
 - கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
 - கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
 - கட்டிக்கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த பொய்யும் எத்தனை நாள் நிற்கும்.
 - கட்டின சேலை பாம்பாய் கடித்ததாம்.
 
- கட்டின வீட்டுக்கு எட்டு வக்கணை.
 - கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
 - கட்டை உள்ளவரை கஷ்டமுண்டு.
 - கணக்கன் கணக்கறிவான்; தன் கணக்கைத் தான் அறியான்.
 - கணக்கன் கணக்கைத் தின்னாவிடில். கணக்கனை கணக்கு தின்று விடும்.
 - கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குத் குறைவில்லை.
 - கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
 - கண் கண்டது கை செய்யும்.
 - கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
 - கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
 - கண்டது சொல்ல வந்திடும் பகை.
 - கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
 - கண்டால் ஒரு பேச்சு; காணாவிட்டால் ஒரு பேச்சு.
 - ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
 
No comments:
Post a Comment