Saturday, March 22, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -9)

  • புறம் பேசும் உறவுக்காரனை விட, போட்டி போடும் அயலானே நல்லவன்.
  • பிறருடைய தவறுகளை நீ மன்னித்தால் தான் உன்னுடைய தவறுகள் மன்னிக்கப்படும்.
  • உள்ளார்க்கு செல்வங்கள் சொந்தம், அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்.
  • முதுமையை அலட்சியம் செய்யாதே. அது உன்னையும் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
  • கடனாகக் கொடுப்பதை விட இனாமாகக் கொடுப்பது நல்லது.
  • சொல்லானது அம்பு போல, ஒரு முறை எய்து விட்டால் திரும்பப் பெற முடியாது.
  • இறைவனிடம் மனம் ஈடுபடுவதைப் பொறுத்து விதியின் கொடுமை குறையும்.
  • முயன்று தோற்பது கௌரவம் முயலாமல் இயலாது என்பது கேவலம்.
  • ஒவ்வொரு சோதனையும் நமக்கு பயனான படிப்பினை ஒன்றை போதிக்கிறது.
  • நினைத்த காரியத்தை இடையில் ஏற்படும் தோல்விக்காக கை விட்டு விடாதே.
  • உண்மையான பெரிய மனிதனுக்கு முதல் அடையாளம் பணிவாக இருத்தல்.
  • எளிய மனிதர்களுக்கு உதவுவதின் மூலமே, பெரிய மனிதர்களின் பெருந்தன்மை வெளிப்படும்.
  • ஒரு வினாடியில் நாம் செய்யும் தவறு வாழ்நாள் முழுவதும் வேதனை தரும்.
  • உனக்கு தெரிந்தவற்றை மட்டும் நீ செய் தெரியாததில் தலையிடாதே.
  • பணத்தை சேர்ப்பது பெரிய சாதனை, அதை விட பெரிய சாதனை அதைக் காப்பது.
  • நன்மைகளைப் பேசத் தெரியாவிட்டாலும் தீமைகளை ஏசத் தெரிய வேண்டும்.
  • மகிழ்ச்சிகரமான எதிர்காலத்தை நம்பாதே உயிருள்ள நிகழ்காலத்தில் செயல்படு.
  • மருத்துவத்தை விட, திட்டமிட்ட உணவு முறை அதிக நலனை உண்டாக்கும்.
  • துன்பங்களைக் கண்டு துவளாதே, கயவர்களை கண்டு கலங்காதே, வெற்றியைக் கண்டு வியப்படையாதே.
  • எது அழகாக இருக்கிறதோ அது மரிப்பதே இல்லை மற்ற அழகுகளினுள் கலந்து விடுகிறது.
  • பிள்ளைக்கு கல்வி கற்க ஏற்பாடு செய்யாதவன் ஒரு திருடனை உருவாக்குகிறான்.
  • எல்லாம் தெரிந்ததாக நடிப்பவனைக் காட்டிலும் எதையும் தெரிந்து கொள்ளத் துடிப்பவர் சிறந்தவர்.
  • தூங்கினேன், வாழ்வே அழகு என்று கனவு கண்டேன். விழித்தெழுந்தேன், வாழ்வே கடமை என்று உணர்ந்தேன்.
  • படித்த இளைஞனுக்கு வேலை தராத சமுதாயம் ஒரு தீவிரவாதியை உருவாக்குகிறது.
  • வெற்றியில் கற்றுக் கொள்வதை விட தோல்வியில் தான் அதிகமாக கற்றுக் கொள்கிறோம்.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

No comments:

Post a Comment