1. சிக்கனத்தை கடைபிடிக்காதவன் வருத்தமடைய நேரிடும்.
2. சொர்க்கத்தில் அடிமையாய் இருப்பதை விட நரகத்தில் அரசனாய் இருப்பது மேல்.
3. சொர்கத்திற்கு ஒரே வழி, ஆனால் நரகத்திற்கு பல வழி.
4. மனித குலத்தினால் பயன்படுத்தப்படும் மிகச் சக்தி வாய்ந்த மருந்து, சொற்கள் தான்.
5. எப்படி புகழ்வது என்று தெரியாத ஒரு பொருளை குறை கூறாதீர்கள்.
6. இரக்க குணத்தின் கதவைத் திறக்கும் வரைதான் கஷ்டம்; திறந்தபின் மூடுவது முடியாது.
7. செயலற்ற தன்மை உன்னை மாற்றாது. செயல்படும் வேகமே மாற்றும்.
8. துன்பத்தை முழுவதும் அனுபவித்த பின்தான் நாம் அந்த துன்பத்திலிருந்து குணமடைகிறோம்.
9. ஒரு நல்ல புத்தகம் தலைசிறந்த ஆன்மாவின் விலைமதிப்பற்ற உயிர்த்துடிப்பு.
10. பெரும்பாலோர் தொடர்ந்து நன்றி காட்டுவது மேலும் உதவியைப் பெறுவதற்காகவே .
-->
11. உங்கள் கரங்களை போலவே உங்கள் உள்ளமும் தூய்மையாக இருக்கவேண்டும்.2. சொர்க்கத்தில் அடிமையாய் இருப்பதை விட நரகத்தில் அரசனாய் இருப்பது மேல்.
3. சொர்கத்திற்கு ஒரே வழி, ஆனால் நரகத்திற்கு பல வழி.
4. மனித குலத்தினால் பயன்படுத்தப்படும் மிகச் சக்தி வாய்ந்த மருந்து, சொற்கள் தான்.
5. எப்படி புகழ்வது என்று தெரியாத ஒரு பொருளை குறை கூறாதீர்கள்.
6. இரக்க குணத்தின் கதவைத் திறக்கும் வரைதான் கஷ்டம்; திறந்தபின் மூடுவது முடியாது.
7. செயலற்ற தன்மை உன்னை மாற்றாது. செயல்படும் வேகமே மாற்றும்.
8. துன்பத்தை முழுவதும் அனுபவித்த பின்தான் நாம் அந்த துன்பத்திலிருந்து குணமடைகிறோம்.
9. ஒரு நல்ல புத்தகம் தலைசிறந்த ஆன்மாவின் விலைமதிப்பற்ற உயிர்த்துடிப்பு.
10. பெரும்பாலோர் தொடர்ந்து நன்றி காட்டுவது மேலும் உதவியைப் பெறுவதற்காகவே .
12. ஒவ்வொருவன் வாழ்க்கையிலும் ஏற்றம் ஒன்று வரும். நன்கு பயன்படுத்தச் செல்வப் பெருக்கு மிகும்.
13. சிறு சிறு விஷயங்கள் ஆனதே வாழ்க்கை, சின்னச் சின்ன ஆசை உடையதே வாழ்க்கை.
14. நன்றி விசுவாசத்துடன் நடந்து கொள்ளுங்கள். ஆண்டவன் ஆசிக்கு ஆளாகுங்கள்.
15. வாழ்க்கையில் உனக்கு வேண்டியது அறியாமையும் நம்பிக்கையும், அது இருப்பின் வெற்றி நிச்சயம்.
16. மற்றவர்களுடைய வாழ்க்கையோடு ஒப்பிடாமல் உன் சொந்த வாழ்க்கையை அனுபவி.
17. உடைவதை விட வளைவது மேல். அமைதியாக வாழ எதையும் விட்டுக்கொடுக்கலாம்.
18. உன்னுடைய சொற்களைக் கவனி, அவைகள் உன்னுடைய செய்கைகள் ஆகும்.
19. இயற்கை ஆக்கும் செல்வம் வாழ்க்கை. ஆனால் அறிவு ஆக்கு. ம் செல்வம் சிறந்த வாழ்க்கை.
20. அலட்சியம் என்ற உறைக்குள்தான் தீமை தன் கையைச் சொருகிக் கொண்டிருக்கிறது.
21. பெண்ணின் அன்பு, ஆணின் வலிமையை விட மேலானது.
22. தாய் செய்யும் தியாகத்தை இந்த கைகளினால் எழுத முடியாது.
23. பயனுள்ள முயற்சிகளின் வெற்றி நம்பிக்கையில் உள்ளது.
24. பிறரை தூக்கி விட குனிபவனே உலகின் உயர்ந்த மனிதன்.
25. பொருளாதார சமத்துவம் தான் சுதந்திரத்தின் உயிர்நாடி.
26. காலத்தை தவிர வேறொன்றும் நமக்கு சொந்தமில்லை.
27. பொறுமை உள்ளவன் தான் விரும்புவதை அடைவான்.
28. சில சொற்கள் மட்டுமே பேசும் மனிதர் சிறந்த மனிதர்.
29. பேச்சுக்கலை என்பது கேட்போரிடம் நம்பிக்கையை உண்டாக்குவது.
30. அச்சமின்மை தான் ஆன்மிகத்தின் முதல் படி.
31. தன் குற்றங்களை உணராதவன் எவனோ அவனே உண்மையான குருடன்.
32. அதிகம் பேசுபவர்கள் செயலில் திறமை அற்றவர்கள்.
33. மனித வர்க்கத்தின் உயர்ந்த ஊக்கங்களாக பெண்ணே திகழ்வாள்.
34. எண்ணங்கள் செயல்களாக மாறுவதே வெற்றியை நோக்கிய பயணம்.
35.எதை நீ இழந்தாலும், இன்னும் உனக்கு எதிர்காலம் இருக்கிறது.
36. பயத்தை உன்னிடமே வைத்துக்கொள், உன் துணிவை பகிர்ந்துகொள்.
37. மிகப்பெரிய நோக்கத்தை காட்டிலும் மிகச் சிறிய செயல் மேலானது.
38. கெட்டிக்காரன் ஏமாந்தால் அப்பனிடம் சொல்லமாட்டான்.
39. அமைதியிலும் அசையா உறுதியிலுமே நம் வலிமை உள்ளது.
40. உலகத்தையும் அசைய செய்வது மன உறுதியே.
41. நாக்கு கொடிய மிருகம் ஒருமுறை அவிழ்த்து விட்டால் கட்டுவது கடினம்.
42. ஓய்வு ஒரு அழகான ஆடை. அதை தொடர்ந்து அணிவது நல்லதல்ல.
43. பசியும், வறுமையும், மனிதனை எதிரியிடம் ஒப்படைக்கின்றன.
44. எல்லாப் பூட்டுகளையும் திறக்கும் ஒரே திறவுகோல் பணம்.
45. ஒழுக்கத்தை உங்களுடைய இலட்சியமாகக் கொள்ள வேண்டும்.
46. ஒரு பெண்ணை படிக்க வைப்பது, ஒரு குடும்பத்தை படிக்க வைப்பதற்குச் சமம்.
47. வெறும் வளர்ச்சி தரத்தை உண்டாக்காது.
48. அறிவு கண்களில் தெரியும். அன்பு முகத்தில் தெரியும்.
49. சமுதாயத்தைப் பின்பற்றி மனிதன் அடக்கமாக பணியாற்ற வேண்டும்.
50. உண்மையான பெரிய மனிதர்களுக்கு முதல் அடையாளம் பணிவு.
51. ஒருவரையும் நம்பாமல் இருப்பது ஆபத்து. அனைவரையும் நம்புவது பேராபத்து.
52. நல்ல மனசாட்சி தான் உண்மையான தவறு செய்யாத நீதிபதி.
53. பயத்தை வெளிக்காட்டினால் அது அபாயத்தை எதிர்கொண்டு அழைப்பதாகும்.
54. சோம்பலுக்கு ஒரு நாளை கொடுத்தால் அடுத்த நாளையும் சேர்த்து எடுத்துக் கொள்ளும்.
55. வெற்றி நிச்சயம் என்று நம்புகிறவனுக்கு வெற்றி கிடைப்பது உறுதி.
56. தகுதியும் நல்ல அதிர்ஷ்டமும் நெருங்கியவை என்பது மூடர்களுக்கு தெரியாது.
57. அறிவு வேண்டும் என்று ஆசைப்பட்டால் நாவை அடக்கி ஆள வேண்டும்.
58. ஓர் இன்னாச் சொல்லால் தீய செயல்கள் இரட்டிப்பாகி விடுகின்றன.
59. உண்மையை நேசி ஆனால் பிழையை மன்னித்துவிடு.
60. விழித்தவுடன் கிடைப்பதல்ல வெற்றி. வீழ்ந்து எழுந்தவுடன் கிடைப்பது தான் வெற்றி.
61. தெரியாமல் செய்த பிழைக்கு நாம் அனுதாபம் காட்ட வேண்டும்.
62. நல்ல நண்பன் நூறு நண்பர்களை நினைவுறுத்தி ஒரு தவறை மறந்து விடுவான்.
63. உன் சிந்தனையே உன்னை நிலை நிறுத்தும்.
64. மூடன் அதிகமாக சிரிப்பான். வஞ்சகன் சிரிக்கவே மாட்டான்.
65. நாணயத்தை இழந்தவனுக்கு, இழப்பதற்கு வேறொன்றுமில்லை.
66. தவறு செய்யாதவன் என்று தன்னை யாரும் கூறிக்கொள்ள முடியாது.
67. கண்ணியம் இல்லாத அறிவு ஆபத்தானது, அஞ்சத்தக்கது.
68. ஏளனம் என்பது குறுகிய உள்ளத்திலிருந்து எழுகிற நச்சுப் புகை.
69. தோல்வி அடைவது குற்றமில்லை. முயற்சி இன்மையே குற்றம்.
70. மன அமைதி வேண்டுமெனில் பிறரிடம் குற்றம் காணாதே.
71. ஏராளமான வாய்ப்புகள் வரும் போது எச்சரிக்கையாக இரு.
72. உண்மைக்காக தூக்குமரம் ஏறக்கூட தயாராக இருங்கள்.
73. உண்மையைக் கடைபிடிப்பவனால் அடைய முடியாதது ஏதுமில்லை.
74. இயற்கை, காலம், பொறுமை இவை மூன்றும் சிறந்த மருத்துவர்கள்.
75. சதுரங்க விளையாட்டைப் போல் வாழ்விலும் முன்யோசனை வெற்றி பெறுகிறது.
76. எவரையும் எப்போதும் அவமதிக்கக் கூடாது.
77. அதிகம் சொல்ல விரும்புகிறவன், குறைவான வார்த்தையை பயன்படுத்துவான்.
78. அறிவு ஒரு கருவூலம், கேள்விகளே அதன் திறவுகோல்.
79. எளிமையான பணிகளை அலட்சியம் செய்யக் கூடாது.
80. நம்முடைய பாதுகாப்புக்காக நாம் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும்.
81. பெண்ணே மனிதனின் உயர்ந்த ஊக்கங்கள் எல்லாவற்றுக்கும் விளக்கு.
82. ஆசைகளுக்கு சமமான நெருப்பு வேறு எதுவும் இல்லை.
83. பேச்சை விட செயலுக்கே வலிமை அதிகம்.
84. ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கும் அதிர்ஷ்டத்திற்கு அவன் தான் சிற்பி.
85. மனவலிமை இல்லாதவர்கள் சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்கின்றனர்.